அட்ஜஸ்ட்மென்ட் ஏகப்பட்டது இருக்கு.! உண்மையை வெளிப்படையாக கூறி அதிர்ச்சி ஏற்படுத்திய பிரியா பவானி சங்கர்…

priya-bhavani-shankar
priya-bhavani-shankar

சினிமா பின்புலமே இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தன்னுடைய முழு திறமையால் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து ஜொலித்துக் கொண்டிருக்கும் ஹோலிவுட் சினிமா பிரபலங்கள் பலர் இருக்கிறார்கள். அந்த லிஸ்டில் டாப் நடிகையாக அதிக மார்க்கெட்டை பிடித்து இருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர், இவர் முதன் முதலில் செய்தி வாசிப்பாளராக தான் சின்ன திரையில் கால் தடம் பதித்தார் அதனை தொடர்ந்து சீரியலிலும் நடித்துக் கொண்டிருந்தார்.

பிறகு வெள்ளித்திரையில்  முதன்முதலாக மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அவர் நடித்த  முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது, அதனால் இவருக்கு அடுத்த பட வாய்ப்பு அமைந்தது, அதனை தொடர்ந்து மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம், ஜெயம் ரவி அவர்களுடன் அகிலன், சிம்புவுடன் 10 தல என பல திரைப்படங்களில் நடித்தார்.

அது மட்டும் இல்லாமல் ராகவால் லாரன்ஸ் அவர்களுடன் இணைந்து ருத்ரன் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார், மேலும்மான்ஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் எஸ் ஜே சூர்யா அவர்களுடன் இணைந்து பொம்மை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ப்ரியா பவானி சங்கர் சினிமாவை தாண்டி சமீபகாலமாக பிசினஸில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் லியன்ஸ் டைனர் என்ற ஹோட்டலை சென்னையில் திறந்து வைத்துள்ளார். இந்த ஹோட்டல் தன்னுடைய காதலனுக்காக தான் திறக்கப்பட்டது எனவும் தன்னுடைய காதலனுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தற்பொழுது சிங்கிளாக இருப்பதாகவும் தகவல் கிடைத்தது.

சினிமாவைப் பொறுத்தவரை நடிகைகளுக்கு வாய்ப்பு வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் என்ற கலாச்சாரம் இருந்து வருகிறது இதனை பல நடிகைகள் வெளிப்படையாக கூறி வருகிறார்கள் ஆனாலும் இந்த அட்ஜஸ்ட்மென்ட் கலாச்சாரத்தை ஒழிக்கவே முடியவில்லை.. அதேபோல் நடிகைகளை பேட்டி எடுக்கும் பொழுது அட்ஜஸ்ட்மென்ட் என்ற வார்த்தையை தான் முதலில் கேட்கிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ப்ரியா பவானி சங்கர் அட்ஜஸ்மென்ட் குறித்தும் பல விஷயங்களை புட்டு புட்டு வைத்துள்ளார் இவர் சினிமாவில் நடந்த அட்ஜஸ்மென்ட் குறித்து மனம் திறந்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் ஆளாகும் பெண்கள் மிகவும் தைரியமாக பேச வேண்டும் அதைவிட முக்கியமானது அவர்கள் சொல்வதை இந்த சமுதாயம் காது கொடுத்து கேட்க வேண்டும் அப்பதான் அவர்களுக்கு மேலும் தைரியம் வரும்.

அப்படி தைரியமாக அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசும் பெண்கள் மீது கடைசியில் இருந்த சமுதாயம் பழி போடவும் தயங்க மாட்டேன் என்கிறார்கள், நீ ஏன் இதை முன்கூட்டியே சொல்லவில்லை, உனக்கு இதில் உடன்பாடு இல்லை என்றால் எதற்கு நீ ஒத்துக் கொண்டாய், என பல்வேறு தேவையில்லாத கேள்விகளை அந்த பெண்கள் மீது திணிக்கிறார்கள். இப்பொழுது அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசுகிறாயே அப்பொழுது அதைப் பற்றி பேச வேண்டியதுதானே வளர்ந்த பிறகு ஏன் பேச வேண்டும் எனவும் கேள்வி எழுப்புகிறார்கள் என பிரியா பவானி சங்கர் கூறியுள்ளார்.

அது மட்டும் இல்லாமல் சினிமாவை தாண்டி பல துறைகளில் அட்ஜஸ்மென்ட் இருந்து கொண்டு தான் இருக்கிறது முக்கியமாக இந்த பிரச்சனையை யாரும் கண்டு கொள்ளாமல் இருக்க கூடாது. பெண்கள் இந்த துறை அந்த துறை அல்லது எந்தத் துறையிலும் பணியாற்றினாலும் உடல் ரீதியாக டார்ச்சர் கொடுக்க வேண்டும் என உறுதியாக இருக்கிறார்கள் சில வக்கிர பிடித்த ஆண்கள் இது மாதிரி வேலை செய்கிறார்கள் என்று பாகுபாடு இல்லாமல் பல வழிகளில் பெண்களுக்கு தொல்லை கொடுக்கிறார்கள்.

அதுவே சினிமாவில் இருப்பவர்களிடம் பகிரங்கமாக கேள்வியை கேட்டு விடுகிறார்கள். ஆனால் இந்த துறையில் மட்டுமல்ல பல்வேறு துறைகளிலும் இது நடந்து கொண்டே தான் இருக்கிறது இவ்வாறு பிரியா பவானி சங்கர் மழுப்பலாகவும் சிரிப்புடனும் பேசியுள்ளார் இவர் பேசியதை பார்த்தால் மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பார் என நெட்டிசன்ங்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.