சின்னத்திரையில் நடித்தவர்கள் பலரும் வெள்ளித்திரையில் பல்வேறு விதமான பட வாய்ப்புகளை கைப்பற்றிய முன்னணி நடிகைகளுக்கு டஃப் கொடுக்கின்றனர் அந்த வகையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து தனது சின்னத்திரையில் பயணத்தை தொடர்ந்தார் பிரியா பவானி சங்கர் அதன்பின் படிப்படியாக மீடியாவில் வளர்ந்து ஒரு கட்டத்தில் வெள்ளித்திரையில் ஹீரோயினாக உருமாறினார்.
முதலில் “மேயாதமான்” என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் இவர் மாஃபியா, மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்து வந்தார் இதில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்ததால் தற்போது பல்வேறு திரைப்படங்கள் குவிகின்றன. அந்த வகையில் பத்து தல, ருத்ரன், ஓமன பெண்ணே, குருதி ஆட்டம், யானை போன்ற பல்வேறு திரைப்படங்களை கையில் வைத்திருக்கிறார்.
எடுத்தவுடனேயே பல்வேறு திரைப்படங்களை கையில் வைத்திருப்பதால் பிரியா பவானி சங்கரை மற்ற நடிகைகள் பொறாமையுடன் பார்க்கின்றனர். சினிமாவில் இருக்கின்ற இடம் தெரியாமல் இவ்வளவு படங்களை கைப்பற்றி உள்ளதுவெள்ளி திரையைத் தாண்டி மக்களையே தற்போது வியப்பில் ஆழ்த்துயுள்ளனர்.
இப்படியே போய்க்கொண்டிருந்தால் பிரியா பவானி சங்கர் தனது சம்பளத்தை அதிகமாகிக் கொண்டு வெகு விரைவிலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தையும் பிடித்து விடுவார் எனவும் கூறப்படுகிறது.
மீடியா உலகில் இருந்து படிப்படியாக சினிமா துறைக்கு வந்துள்ளதால் சினிமாவைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு செயல்படுகிறார். தற்பொழுது பல படங்களை கையில் வைத்துள்ளதால் உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம் என்பதை சரியாக உணர்ந்து தற்போது ஜிம்மே கதியே கிடக்கிறாராம் மேலும் இவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்த வீடியோ ஒன்று இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.
#priyabhavanishankar #actress pic.twitter.com/mF045114B1
— Tamil360Newz (@tamil360newz) September 22, 2021