நடிகை பிரியா பவானி சங்கர் கடந்த பத்து வருடங்களாக ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு பிறந்த நாள் என்றால் இவர் தன்னுடைய சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்துக் கூறி வருகிறார்.
பவானி சங்கர் தொலைக்காட்சிகளில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் முதன்முதலாக மேயாதமான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தாம் நடித்த முதல் திரைப்படமே ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வந்ததால் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
அருண் விஜய்யின் மாபியா ஜெய் சூர்யா உடன் மான்ஸ்டர் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் நடித்திருந்தார் இதனைத் தொடர்ந்து தற்போது இவர் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் யானை, குருதி ஆட்டம், ருத்ரான், திருச்சிற்றம்பலம் என பல படங்களில் நடித்து வருகிறார்.
சொல்லப்போனால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை அடைந்தவர். இவர் தற்போது தனது கைவசம் 10 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் பிரியா பவானி சங்கர் தன்னுடைய காதலனை வெளி உலகத்துக்கு சமூக வலைதளத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.
இந்த நிலையில் அவரின் பிறந்த நாளை முன்னிட்டு புதிய செய்தி ஒன்றையும் வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது நீ ஒரு மோசமான டீன்ஏஜ் பையனாக இருந்து இப்போது ஒரு அற்புதமான மனிதனாக மாறி விட்டாய் நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி, புன்னகை, சாகசங்கள் அன்பு நட்பு அமைதி ஆரோக்கியம் என அனைத்தும் உனக்கு கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.