தமிழ் சினிமாவின் சின்னத்திரை நடிகைகள் பலரும் வெள்ளித்திரையில் கால்தடம் பதித்து வெற்றி கண்டு வருகிறார்கள் அந்த வகையில் பிரிய பவனி சங்கர் சின்னத்திரையின் மூலம் பிரபலமடைந்தவர் அதன் பிறகு வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தது தற்பொழுது அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
நடிகை பிரியா பவானி சங்கர் கடந்த பத்து வருடங்களாக ஒரு நபரை காதலித்து வரும் நிலையில் தனது காதலரின் பிறந்த நாளை அடுத்து உருக்கமான பதிவை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.
ப்ரியா பவானி சங்கர் கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அதன்பிறகு மான்ஸ்டர், மாபியா ஆகிய திரைப்படங்களில் நடிகையாக நடித்து சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருகிறார்.
இந்த நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் பத்து வருடமாக ராஜவேல் என்பவரை காதலித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் தன்னுடைய காதலர் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பிரியா பவானி சங்கர் பதிவிட்டுள்ளார் இந்நலையில் தற்பொழுது காதலரின் பிறந்த நாள் என்பதால் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதில் இருவரும் இணைந்து 10 வருடத்திற்கு முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படமும் தற்போது எடுக்கப்பட்ட புகைப்படமும் இடம் பெற்றுள்ளன. அந்த புகைப்படத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துகளை பிரிய பவனி சங்கர் கூறியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் தன்னுடைய தந்தைக்கு நிகராக என்னை பார்த்துக் கொள்ளக் கூடிய ஒருவர் இருக்கிறார் என்றால் அது நீங்கள் தான். இந்த பத்து வருடங்களில் முற்றிலும் மாறிவிட்டது ஆனால் நாம் இருவருக்கும் உள்ள காதல் மட்டும் மாறவே இல்லை உங்களுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என தன்னுடைய உருக்கமான பதிவுகளை வெளியிட்டுள்ளார்.