சீரியலில் இருந்து வரும் பல நடிகைகள் வெள்ளித்திரைக்கு படை எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர்தான் பிரியா பவானி சங்கர் இவர் 2017 ஆம் ஆண்டு மேயாதமான் என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு தனது பயணத்தை தொடங்கினார்.
பிரியா பவானி சங்கர் ஒரு வருடத்திற்கு ஒரு படம் என்ற கொள்கையை கடைபிடித்து நல்ல கதை உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் அதனால் வெற்றியும் கண்டார். இவர் எஸ் ஜே சூர்யா உடன் மான்ஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெரும் புகழும் பெற்றார்.
இந்த நிலையில் பிரியா பவானி சங்கர் காட்டில் அடைமழை என்று தான் கூற வேண்டும் ஏனென்றால் இந்த வருடம் மட்டும் இவரது கைவசம் கிட்டத்தட்ட 10 திரைப்படங்கள் இருக்கிறது. கசடதபற குருதி ஆட்டம் ஓமன பெண்ணே ஹாஸ்டல் ருத்ரன் இந்தியன் 2 பத்து தலை என பல புதிய திரைப்படங்களில் கமிட்டாகி கொண்டே இருக்கிறார். இவரின் அசுர வளர்ச்சி முன்னணி நடிகைகளை ஆட்டி பார்க்கும் படி அமைந்துள்ளது.
இவர் முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் இதுவரை நடிக்கவில்லை என்று தான் கூற வேண்டும் ஏனென்றால் நடிகர் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் நடித்திருந்தாலும் ஹீரோயினாக அவர் நடிக்கவில்லை ஆனால் சமீபகாலமாக சிம்பு, ஜெயம் ரவி, என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க துவங்கிவிட்டார்.
கையில் பல திரைப்படங்கள் இருந்தாலும் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வாழ்த்து கூறும் விதமாக கொழுக்கட்டை எடுத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் ஒரு கொழுக்கட்டை இன்னொரு கொழுக்கட்டையை திங்கிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.