தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் இருந்தாலும் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு தாவும் நடிகைகளின் வரத்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகைகள் ஓரளவு சினிமாவில் நல்ல பெயரை பெற்று நடித்து வருகிறார்கள். அந்த வகையில் சின்ன திரையில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய கேரியரை துவங்கியவர் பிரியா பவானி சங்கர்.
பிறகு சீரியல் நடிகை, தொகுப்பாளர் என அடுத்த கட்டத்திற்கு சென்றார் சீரியலில் நடித்த பொழுது இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியது. தனக்கு இருக்கும் ரசிகர் பட்டாளத்தை பயன்படுத்தி அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் என்று உறுதியாக இருந்தார். சின்னத்திரையில் நிலையான இடத்தை பிடித்த பிரியா பவானி சங்கர் வெள்ளி திரைக்கு தாவினார். வெள்ளி திரையில் 2017 ஆம் ஆண்டு இயக்குனர் ரத்தினகுமார் இயக்கத்தில் வைபாவுக்கு ஜோடியாக மேயாத மான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
தான் நடித்த முதல் திரைப்படமே மிகப்பெரிய வரவேற்பு பெற்றது அதுமட்டுமில்லாமல் முதல் திரைப்படத்திலேயே ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். அதனால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் மேயாத மான் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியாகிய கடைக்குட்டி சிங்கம் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகிய மான்ஸ்டர் என பல திரைப்படங்களில் நடித்திருந்தார் அது மட்டும் இல்லாமல் தனுஷ் உடன் திருச்சிற்றம்பலம் அருண் விஜய்க்கு ஜோடியாக யானை என பல திரைப்படங்களில் நடித்தார்.
மேலும் பிரியா பவானி சங்கர் தற்பொழுது ருத்ரன், பொம்மை, இந்தியன் 2 பத்து தல என பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் தமிழைத் தாண்டி தெலுங்கு திரைப்படத்திலும் இவர் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் ஒரு சில வெப் சீரிஸ் தொடரிலும் நடித்து வருகிறார். சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசெய்தன்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர் கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார் அந்த வகையில் சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம் சல்லடை போல் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாக வருகிறது.