சின்னத்திரையில் இருந்து நடிகைகள் வெள்ளித்திரைக்கு படையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள், அந்த வகையில் சமீபத்தில் வெள்ளித்திரைக்கு வந்தவர்களில் பிரியா பவானி சங்கரும் ஒருவர் இவர் சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார், அதன்பின் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்து பல்வேறு ரசிகர்களை தனது பக்கம் கட்டிப்போட்டவர்.
பின்பு 2017 ஆம் ஆண்டு வெள்ளித்திரையில் மேயாதமான் என்ற திரைப்படத்தின் மூலம் கால்தடம் பதித்தார், அந்த திரைப்படத்தில் எஸ் மதுமிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், அதனைத்தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்தில் பூம்பொழில் செல்லம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.
இப்படி சில திரைப்படங்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் எஸ் ஜே சூர்யா உடன் மான்ஸ்டர் திரைப்படத்திலும் நடித்து இருந்தார், அதனைத் தொடர்ந்து குருதி ஆட்டம், காதலில் சந்திப்போம், கசடதபர, மாபியா, பொம்மை, இந்தியன் 2 என பல திரைப்படங்களில் நடித்து வரும் பிரியா பவானி சங்கர். சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் டச்சிலேயே இருப்பார்.
அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு வருபவர் பிரியா பவானி சங்கர், இவர் தற்பொழுது ஜீன்ஸ் பேண்ட் உடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிண்டலடித்த வருகிறார்கள் ஏனென்றால் அந்த புகைப்படத்தில் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து உள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் ஜீன்ஸ் வாங்க காசு இல்லையா இப்படி கிழிஞ்ச ஜீன்ஸ் போட்டு இருக்கீங்க என கமெண்ட் செய்துள்ளார்கள்.