அடி வாங்கிய மார்கெட்டை ஒரே படத்தில் தூக்கி நிறுத்த பிரபல இயக்குனரின் படத்தில் இணைந்த பிரியா பவானி சங்கர்.!

priya-bhavani-shangar
priya-bhavani-shangar

தமிழ் திரை உலகில் வலம் வரும் அனைத்து முக்கிய மற்றும் பிரபலமான நடிகைகளுக்கு நிகராக பல பட வாய்ப்புகளை பெரும் நடிகை தான் பிரியா பவானி சங்கர் இவர் தனது அழகான நடிப்பின் மூலம் பல பட வாய்ப்புகள் பெற்று வருகிறார், இதற்கு ஏற்றது போல் இவருக்கு ரசிகர்களின் கூட்டமும் அதிகம் தான். மேயாத மான் என்னும் படத்தின் மூலம் மிகவும் அறிமுகமானவர்தான் பிரியா பவானி சங்கர் .

இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல முதன்முறையாக நாகசைத்தன்யா அவர்களுடன் இணைந்து ஒரு தெலுங்கு வெப் சீரியஸில் நடித்துள்ளார், அது அமேசான் பிரைமில் வெளிவரும் நிலையில் உள்ளது. 2022 ல் வெளிவந்த படங்களான யானை, ஹாஸ்டல், குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம் போன்ற முக்கிய படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது இப்படங்களுடன் சேர்த்து பிரியா பவானி சங்கர் மக்களிடையே நன்கு அறிமுகமானார்.

மேலும் இவர் முன்பே ஒரு முறை மான்ஸ்டர் என்னும் திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யாவுடன் நடித்திருப்பார் மேலும் அதைத் தொடர்ந்து தற்போது பொம்மை என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார், இந்த படத்தை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடித்த படமான ருத்ரன், இந்த இரு படங்களும் ப்ரியா பவானிசங்கரை கதாநாயகியாக கொண்டு வெளிவரவுள்ளது.

இதை அடுத்து இந்தியன் 2 திரைப்படத்திலும் பிரியா பவானி சங்கர் ஒரு முக்கிய கதாபாத்திரமாக உள்ளார், கீர்த்தி சுரேஷை வைத்து பென்குயின் படம் எடுத்தவர் தான் இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக், தற்பொழுது இவரது இயக்கத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் சத்ய தேவ் மற்றும் டாலி தனஞ்ஜெயா என்ற தெலுங்கு பிரபல நடிகர்கள் நடிக்க உள்ளனர் மேலும் இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் தான் கதாநாயகி என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது, இந்தப் படம் ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவர உள்ளது,அதைப் பற்றிய முழு விவரங்கள் கீழே.