ஒரு காலகட்டத்தில் சினிமாவில் பல நடிகைகள் முன்னணி நடிகையாக நடித்து வருவார்கள் ஆனால் திருமணத்திற்கு பிறகு அவர்களுக்கு பட வாய்ப்பு கிடைக்காது அதனால் அந்த நடிகைகள் சீரியல் பக்கம் தலை காட்டுவார்கள். ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது.
சமீபகாலமாக சீரியலில் நடித்து வரும் நடிகைகள் சினிமாவில் நடிக்க படையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள் அந்த லிஸ்டில் பல நடிகைகளை கூறலாம். அந்த லிஸ்டில் நடிகை பிரியா பவானி சங்கரும் ஒருவர், இவர் முதன்முதலில் சீரியலில் தான் நடித்து வந்தார், சீரியலில் நடித்ததால் இவர் பல ரசிகர் கூட்டத்தை பெற்றார்.
அதனைத் தொடர்ந்து பிறகு வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தார் வெள்ளித்திரையில் மேயாதமான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதுமட்டுமில்லாமல் எஸ் ஜே சூர்யா உடன் மான்ஸ்டர் திரைப்படத்தில் நடித்திரந்தார்.
அதுமட்டுமில்லாமல் கார்த்தி நடிப்பில் ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், தற்பொழுது இவர் ‘இந்தியன்-2’ திரைப்படத்திலும் கமிட்டாகி நடித்து வருகிறார், மேலும் ஹரிஷ் கல்யாண் உடன் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் அந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது.
எப்பொழுதும் சமூக வளைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் பிரியா பவானி சங்கர் ஒருவர் இவர் புகை படத்தை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் துபாயில் நீச்சல் குளத்தில் எடுத்த சில புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இதனை காண ரசிகர் கூட்டம் குவிந்து வருகிறார்கள்.