ஜிம் பாடி ஹீரோக்களை ஓரங்கட்டும் அளவிற்கு 360 கிலோ எடையை அசால்டு செய்த பிரியா பவானி சங்கர்.! வைரலாகும் வீடியோ

priya-bhavani-shankar
priya-bhavani-shankar

தமிழ் சினிமாவில் அக்காலகட்டத்தில் வெள்ளித் திரையில் நடித்துவரும் நடிகைகளுக்கு பட வாய்ப்பு குறைந்து விட்டால் சின்னத்திரையில் கால்தடம் பதிப்பார்கள். ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் அப்படியே மாறாக சின்னத்திரையில் பிரபலமாகி விட்டு வெள்ளித்திரையில் கால்தடம் பதித்து வருகிறார்கள் பல நடிகைகள் அந்த வகையில் பல நடிகைகளை கூறலாம்.

அவர்களில் ஒருவர்தான் பிரியா பவானி சங்கர் இவர் ஆரம்ப காலகட்டத்தில் சின்னத்திரையில் தான் நடித்து வந்தார். முதன்முதலில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது பணியைத் தொடங்கினார் அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதன் பிறகு வெள்ளித்திரையில் முதன்முதலாக மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் கால்தடம் பதித்த இவர் தான்  நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது அதனால் அடுத்தடுத்து படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார் இவர் ஜிம் வொர்க் அவுட்  செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்.

இப்பொழுது ப்ரியா பவனி சங்கர் கமலஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன்2 சிம்புவின் 10 தல அருண் விஜய்யின் யானை என கிட்டத்தட்ட 10 திரைப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம்.

அதேபோல் இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் பின்தொடர்பவர்களை வைத்துள்ளார் இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார் அந்த வீடியோவில் 360 கிலோ எடையை வைத்து ஒர்கவுட் செய்யும் காட்சி இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதோ அவர் வெளியிட்ட வீடியோ. வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.