தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர் பொதுவாக நடிகைகள் சினிமாவில் வாய்ப்பு குறைந்து விட்டால் சீரியல் பக்கம் தலை காட்ட ஆரம்பிப்பார்கள் ஆனால் சமீபகாலமாக சீரியலில் நடித்து வரும் நடிகைகள் பலரும் சினிமாவில் கால் தடம் பதித்து வருகிறார்கள்.
அந்தவகையில் பிரியா பவானி சங்கர் ஷிவானி நாராயணன் என பலரை கூறிக்கொண்டே செல்லலாம். பிரியா பவானி சங்கர் முதன்முதலில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தார் அதன்பிறகு கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.
சின்னத்திரை மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசப்படுத்திய பிரியா பவானி சங்கர் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது மேயாத மான் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். தான் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
மேலும் பிரியா பவானி சங்கர் அருண்விஜய் அவர்களுடன் இணைந்து மாபியா திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த நிலையில் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன்2 திரைப்படத்திலும் சிம்பு நடித்துவரும் 10 தல திரைப்படத்திலும் அருண்விஜய் நடித்து வரும் யானை திரைப்படத்திலும் நடித்து வருகிறார் கிட்டத்தட்ட 10 திரைப்படங்களுக்கு மேல் பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார்.
சினிமாவில் முன்னணி நடிகைகள் பட வாய்ப்பிற்காக சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அதேபோல் நடிகை பிரியா பவானி சங்கர் அடிக்கடி சமூகவலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவேற்றம் செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது பிரிய பவனி சங்கர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் பொழுது தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.