பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் முதன் முதலில் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்து வந்தார் அதன்பிறகு பிரபல தொலைக்காட்சி தொடரான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தார்.
அதன் பிறகு தமிழ் சினிமாவில் நடிகர் வைபவ் நடித்து வெளியாகிய மேயாதமான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார், இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்துவிட்டது இதனை தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமைந்தது.
பின்பு எஸ் ஜே சூர்யா உடன் மான்ஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது இதனை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் வெளியாகிய மாபியா சேப்டர் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றார். கொரோனா காரணமாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதனால் பல மக்கள் மற்றும் பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கிய நிலை ஏற்பட்டுள்ளது இந்நிலையில் பல நட்சத்திரங்கள் ரசிகர்களுடன் சாட் செய்து வருகிறார்கள், நடிகை பிரியா பவானி சங்கரும் ரசிகர்களுடன் சாட் செய்து வருகிறார் அப்பொழுது ரசிகர் ஒருவர் உங்களின் முதல் சம்பளம் எவ்வளவு என கேட்டுள்ளார், அதற்கு பதிலளித்த பிரியா பவானி சங்கர் ரூ 360 நான் முதல் சம்பளமாக பெற்றேன் என கூறியுள்ளார்.