ஆளை விடுங்கப்பா சாமி எதுக்கு இன்னொரு கிசுகிசு ப்ரியா பவானி சங்கரின் கேள்விக்கு பிரபல நடிகர் பதில்.!

priya-bhavani-shankar
priya-bhavani-shankar

நடிகர் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் ஹாஸ்டல் இந்த திரைப்படத்தில் பிரியா பவானி சங்கர் சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் சமீபத்தில் ஹாஸ்டல் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் இவர் வெள்ளித்திரையில் மேயாதமான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனைத்தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியாகிய மான்ஸ்டர், அருண் விஜய் அவர்களுடன் மாபியா என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இவர் தற்பொழுது   முன்னணி நடிகைகளுக்கு இணையாக கைவசம் பல திரைப்படங்களை வைத்துள்ளார். இந்த நிலையில் நடிகர் சதீஸ் அவர்கள் பிரியா பவானி சங்கர் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “எஸ் அதேதான்’  என கேப்ஷனாக பதிவு ஒன்றை போட்டுள்ளார் ஆனால் கொஞ்ச நேரத்திலேயே அந்த கேப்ஷனை நீக்கிவிட்டார். உடனே ஹாஸ்டல் டே  என மாற்றிவிட்டார்.

ஆனால் இதனை கவனித்துக் கொண்டிருந்த பிரியா பவானி சங்கர் ஏதோ டெலிட் செய்து இருக்கீங்க நமது மக்கள் பேசுகிறார்களே என்று கேள்வி எழுப்பினார் இதனை பார்த்த சதீஷ் உடனே எதுக்கு இன்னொரு கிசுகிசு என பதிலளித்துள்ளார். இவர்கள் இருவரும் பேசிக் கொண்டது தற்போது இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

அசோக் செல்வன் ப்ரியா பவானி சங்கர் என பலர் நடித்துள்ள ஹாஸ்டல் திரைப்படத்தை சுமந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தான் இயற்றியுள்ளார் பாபோ சசிள் இசையில் பிரவீன் குமார் ஒளிப்பதில் டிரைடன்ட்ஸ் நிறுவனம் ஹாஸ்டல் படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இதோ அவர்கள் பேசிக்கொண்ட பதிவு.