தன் மீது காதலை வெளிப்படுத்திய ரசிகருக்கு பிரியா பவானி சங்கரின் நச் பதில்.!

priya-bhavani-shankar
priya-bhavani-shankar

பொதுவாக முன்பெல்லாம் சினிமாவில் ஒரு நடிகையை பார்ப்பதே கஷ்டம் அதுவே பேசுவது என்றால் நடக்காத விஷயம் இப்படித்தான் நடிகர், நடிகைகள் இருந்து வந்தார்கள். ரசிகர்களும் அவர்கள் தொலைக்காட்சியில் நடிப்பதை பார்த்து சந்தோஷப் பட்டுக் கொள்வார்கள்.

ஆனால் தற்போது இருக்கும் நடிகைகள் தங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் வேண்டும் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இவர்களுக்கு என்று மவுசு அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக ரசிகர்களிடம் லைப் சாட்டில் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில்  ரசிகர்களின் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை அந்த நடிகையிடம் கேட்பதை வழக்கமாக இருக்கிறது.

இந்நிலையில் சமீப காலங்களாக முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் மேயாதமான் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு இவருக்கு திரைப்படங்களில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமடைந்தார்.

இந்நிலையில் இவரும் மற்ற நடிகைகளைப் போல ரசிகர்களிடம் லைவ் சேட்டில் பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.அந்தவகையில் ரசிகர்களும் பல கேள்விகளை கேட்டு வருகிறார்கள். அதற்கு ஏற்றார் போல் தரமான பதிலடி கொடுத்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர்.

அந்த வகையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் மேயாத மான் திரைப்படத்தைப் பார்த்த உடன் 5 நிமிடங்களுக்கு கையும் மைக்குடன் இதயம் முரளி போன்ற மாறிவிட்டேன் நான் பிரியா பவானி சங்கர் என் காதலில் விழுந்து விட்டது போல நினைப்பதாக கூறியுள்ளார். இதனைப் பார்த்த பிரியா பவானி அந்த ரசிகர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் ஹார்ட்டின் ஈமோஜ்களை எத்தனை டேக் செய்து தெரியபடுத்தினாலும் இதயம் முரளி போன்று இருக்க வேண்டாம் உங்கள் அன்பிற்கு நன்றி என்று கூறி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.