நயன்தாரா, திரிஷா என ஏராளமான முன்னணி நடிகைகளை ஓவர்டேக் செய்து பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். தென்னிந்திய சினிமாவில் மற்ற நடிகைகளை விடவும் அதிக படங்களை கைவசம் வைத்துள்ளார். அதோடு தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடிக்க கமிட்டாகி வருவதால் கோலிவுட்டில் ட்ரெண்டிங்கானா நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இப்படிப்பட்ட நிலையில் மீண்டும் முன்னணி நடிகர் ஒருவருக்கு ஜோடியாக நடிக்க உள்ள தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த தகவல் ரசிகர்களை பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நடிகை பிரியா பவானி சங்கர் முதலில் செய்தி வாசிப்பாளராக தான் தனது கேரியரை தொடங்கினார்.
அதன் பிறகு பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த சீரியலின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த இவர் தமிழில் நடிகர் வைபவ் நடிப்பில் வெளிவந்த மேயாதமான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்த திரைப்படத்தினை தொடர்ந்து பல திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்தவகையில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நடிகர்களுக்கு ஜோடியாக ஏராளமான திரைப்படங்கள் நடிப்பதற்காக கமிட் ஆகியுள்ளார்.
இவ்வாறு ஏற்கனவே 8 திரைப்படங்களில் நடித்து முடித்துள்ள இவர் இன்னும் பத்துக்கும் மேல் அட்வான்ஸாக பணம் வாங்கிவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஜெயம் ரவி நடிப்பில் உருவாக உள்ள ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாம்.
நீண்ட காலங்களாகவே முன்னணி நடிகர்ளின் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்று காத்து வந்த பிரியா பவானிக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது. இவர் இதற்கு முன்பு சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அதோட இளம் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இருந்தாலும் இவரின் சம்பளம் உயரவில்லை.
ஆனால், ஜெயம் ரவி திரைப்படம் இவருக்கு சம்பளத்தையும், மார்க்கெட்டையும் உயர்த்தி சினிமாவின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்று கூறப்படுகிறது. பிரியா பவானி சங்கர் மற்றும் ஜெயம் ரவி இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவுள்ள இத்திரைப்படத்தினை பூலோகம் திரைப்படத்தை இயக்கிய கல்யாணம் இயக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதோடு ஆக்ஷன் நிறைந்த திரைப்படமாக அமையும் என்றும் கூறியுள்ளார்கள்.