தற்பொழுது சின்னத்திரையின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமான பல நடிகைகள் உள்ளார்கள் அதுவும் சமீப காலங்களாக பல நடிகைகள் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகியிருக்கிறார் .அந்தவகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர்.
செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார் இதன் மூலம் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இந்த சீரியலின் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்த இவர் வெள்ளித்திரையிலும் நடிக்க ஆரம்பித்தார். நடிகர் வைபவ் நடிப்பில் வெளிவந்த மேயாதமான் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானார்.
இவரின் சிறந்த நடிப்புத் திறமையினால் ஒரு சில திரைப் படங்களில் தொடர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படிப்பட்ட நிலையில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வேண்டும் என்பதற்காகவும் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமடைந்தார்.
இவ்வாறு பிரபலமடைந்த இவருக்கு தற்போது முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகைகளை விடவும் கிட்ட தட்ட பத்து திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது இவர் பொம்மை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் வெளியாகுக் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.எனவே தற்போது அனைத்து நடிகைகளும் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் சோஷியல் மீடியாவே கதி என்று இருக்கிறார்கள். அந்த வகையில் பிரியா பவானி சங்கரும் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
தற்பொழுது புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளார்கள் ஏனென்றால் கும்மென்று கொழுகொழுவென அழகாக இருக்கும் பல நடிகைகள் தற்போது தனது உடல் எடையை குறைத்து வருகிறார்கள்.அந்த வகையில் பிரியா பவானி சங்கர் தனது உடல் எடையை குறைத்து எலும்பும் தோலுமாக மாறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.