செய்தி வாசிப்பாளராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கி இதன் மூலம் பிரபலமடைந்து பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். தனது முதல் சீரியலிலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
இந்த சீரியலை தொடர்ந்து அடுத்ததாக வெள்ளித்திரையில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் நடிகர் வைபவ் நடிப்பில் வெளிவந்த மேயாத மான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானார்.இதனை தொடர்ந்து கதாநாயகியாக மட்டுமல்லாமல் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களிலும் நடித்து மிகவும் பிசியாக இருந்து வந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் திரிஷா, நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ் என ஏராளமான முன்னணி நடிகைகளையே ஓவர்டேக் செய்து சினிமாவில் கலக்கி வருகிறார்.அதாவது தற்போது உள்ள எந்த நடிகைகளுக்கும் கிடைக்காத படவாய்ப்புகள் ப்ரியா பவானி சங்கருக்கு வரிசை கட்டி நிற்கின்றது. இவ்வாறு முன்னணி நடிகைகளுக்கு கிடைக்காத வளர்ந்து வரும் நடிகை இவருக்கு பட வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்பதால் ஒட்டுமொத்த நடிகைகளும் இவரின் மீது பொறாமையில் இருந்து வருகிறார்கள்.
தற்போது இவர் நடிகர் அசோக் செல்வன் மற்றும் சிவா ஆகியோருடன் இணைந்து ஹாஸ்டல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வரவேற்ப்பை பெற்றது. இத்திரைப்படத்தினை தொடர்ந்து இவர் நடிப்பில் ஓ மணபெண்ணே, இந்தியன்-2 உள்ளிட்ட மொத்தம் ஒன்பது திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
அந்தவகையில் ஓ மனப்பெண்ணே திரைப்படத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாண் ஜோடியாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்களுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் ரொமான்ஸ்சாக நடனம் ஆடும் பாடல் வீடியோவை பிரியா பவானி ஷங்கர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.