ஜிம் டிரைனர் முகத்தில் கேக் பூசி பிறந்தநாள் கொண்டாடிய பிரியா பவானி சங்கர்.! லைக் அள்ளும் புகைப்படம்cc

priya bhavani shankar

செய்தி வாசிப்பாளராக சினிமாவில் பிரபலமடைந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி தற்பொழுது வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர்.

இவர் நடிகர் வைபவ் நடிப்பில் வெளிவந்த மேயாதமான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து கடைக்குட்டிசிங்கம், மான்ஸ்டர்,மாபியா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிகையாகவும், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதன் மூலம் பிரபலமடைந்த இவர் தற்பொழுது ஓமன பெண்ணே, இந்தியன் 2 உள்ளிட்ட கிட்டத்தட்ட இன்னும் 10 திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இவர் சினிமாவில் மட்டுமின்றி இன்ஸ்டாகிராமில் அவர் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார்.

இந்நிலையில் தற்பொழுது இவரின் ஜிம் மாஸ்டர் ஒருவருக்கு பிறந்தநாள் கொண்டாடி உள்ளார். அந்த வகையில் பிரியா பவானி சங்கர், ஜிம் மாஸ்டர் மூஞ்சியில்  ஹாப்பியாக கேக்கை பூசிக்கொண்டு கொண்டாடி உள்ளார்கள்.இந்நிலையில் பிரியா பவானி சங்கர் ஜி மாஸ்டருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறும் வகையில் டுவிட் ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்தவகையில் ஜீவா அவர்களுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இந்த ஆண்டு உங்களுக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக அமையும் பொதுவாக என்னை வேலைவாங்கும் நபர்களை எனக்கு பிடிக்காது ஆனால் எனக்கு உங்களை பிடிக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன் என்று கூறியுள்ளார். நீங்கள் என்னை ஃபிட்டாக மாற்றினீர்கள் என்னுடைய கலோரிகளும் எடையும் குறைந்தது உங்களால் தான் என்று கூறி  வெளியிட்டுள்ளார்.