சினிமாவில் உள்ள குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்கள். அதோடு முன்பெல்லாம் வெள்ளித்திரை நடிகைகள் தான் சின்னத்திரைக்கு வருவார்கள் ஆனால் தற்போது சின்னத்திரை நடிகைகள் பலர் வெள்ளித் திரையில் அறிமுகமாகி முன்னணி நடிகைகளாக கலக்கி வருகிறார்கள்.
அந்த வகையில் ஒருவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய வந்தார். அதன் பிறகு இவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து சின்னத்திரை பிரபலம் அடைந்தார்.
இதன் மூலம் ஓரளவிற்கு ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமடைந்த இவர் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காக தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் ரசிகர்களிடம் லைவ் சேட்டில் பேசுவதை தொடங்கினார். இவர் எதிர்பார்த்தது போலவே ரசிகர்கள் மத்தியில் இவருக்கு என ஒரு இடம் கிடைத்தது.
அதன் பிறகு வெள்ளித்திரையில் நடிகர் வைபவ் நடிப்பில் வெளிவந்த மேயாதமான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து சில படங்களில் கதாநாயகியாகவும் குணச்சித்திர நடிகையாகவும் நடித்துள்ள இவருக்கு சொல்லும் அளவிற்கு ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது தான் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். அந்தவகையில் தற்போது சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் பலரை விடவும் அதிக படங்களை கைவசம் வைத்துள்ளார் பிரியா பவானி சங்கர்.
இந்நிலையில் தற்பொழுது லாக் டவுன் காரணமாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் அனைவரும் சோசியல் மீடியாவில் புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்தவகையில் பிரியா பவானி சங்கரும் சிரிப்பு, சோகம் என பாவனைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
இவருக்கு முன்பு ராஷ்மிகா மந்தனாவும் இதே போன்று போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியிருந்தார். எனவே இதனை பார்த்த ரசிகர்கள் ராஷ்மிகா மந்தனாவை காப்பி அடித்து உள்ளார் பிரியா பவானி சங்கர் என கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.