செய்தி வாசிப்பாளராக தனது கேரியரை தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் சில ஆண்டுகள் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.
இதன் மூலம் இவருக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். இதன் மூலம் இவருக்கு வெள்ளி திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் நடிகர் வைபவ் உடன் இணைந்து மேயாத மான் திரைப்படத்தில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.இவர் இப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது.
அந்த வகையில் விஷால் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இவர் நடிகர் அசோக் செல்வன் மற்றும் காமெடி நடிகர் சிவா ஆகியவர்களுடன் இணைந்து ஹாஸ்டல் திரைப்படத்தில் நடித்து வருகிறார். திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது.
இந்நிலையில் இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வீட்டில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது அதனை நீண்ட பதிவாக வெளியிட்டுள்ளார். அதாவது பிரியா பவானி சங்கர் தாதா உயிரிழந்து விட்டாராம் புகைப்படத்தோடு வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து பிரியா பவானி சங்கர் இருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
சந்தோஷமா போய்ட்டு வாங்க தாத்தா❤️😊 pic.twitter.com/vo0H18USyR
— Priya BhavaniShankar (@priya_Bshankar) May 8, 2021