priya ananth : நடிகை பிரியா ஆனந்த் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் முதன் முதலில் வாமணன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த எதிர்நீச்சல் என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஹீரோயினாக நடித்த திரைப்படங்கள் ஓரளவு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால் அதன்பிறகு வணக்கம் சென்னை, வை ராஜா வை, போன்ற திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, ஆனால் தற்போது இவருக்கு சரியான பட வாய்ப்பு அமையவில்லை.
சரியான பட வாய்ப்பு அமையாததால் தற்பொழுது வரும் பட வாய்ப்புகள் அனைத்திலும் நல்ல கதை உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடிக்க முயற்சி செய்து வருகிறார், அந்த வகையில் கடைசியாக நடித்த எல்கேஜி திரைப்படம் இவருக்கு நல்ல விமர்சனங்களைப் பெற்றுக்கொடுத்தது, அதனால் இவருக்கு ஆதித்யா வர்மா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
நடிகை பிரியா ஆனந்த் தான் நடிக்கும் படங்களில் பெரும்பாலும் கவர்ச்சி காட்டாமல் தான் நடித்து வந்தார் ஆனால் இவருக்கு படவாய்ப்புகள் குறைந்ததால் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
மேலும் ப்ரியா ஆனந்த் தற்பொழுது ஒரு வெப் சீரியஸ் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார், அதேபோல் இந்த வெப் சீரியஸில் இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், அதில் பல லிப் லாக் காட்சிகளும் நடிக்க இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.
சமீபகாலமாக சரியான சினிமா வாய்ப்பு இல்லாததால் பல நடிகைகள் வெப் சீரியஸ் நோக்கி படையெடுத்து வருகிறார்கள் அதேபோல் நடிகை பிரியா ஆனந்தும் இந்த முடிவை எடுத்துள்ளார், இவர் எடுத்த இந்த முடிவு ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்ததை கொடுத்துள்ளது.