தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ப்ரியா ஆனந்த்.இவர் வாமனன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.பிறகு இந்தி,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் என அனைத்து மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடிகையாக மட்டுமல்லாமல் பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். இவர் பல படங்களில் நடித்து இந்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை.
இதனால்தான் ஒவ்வொரு மொழியாக எதிலாவது பிரபலமடைந்து விட மாட்டோமா என்ற எண்ணத்தில் மாறி மாறி நடித்து வருகிறார்.
தற்போது இவருக்கு 34 வயது கடந்து விட்டதால் இனிமேல் முன்னணி நடிகையாகவது கொஞ்சம் கஷ்டம் தான் எனவே கிடைக்கும் பட வாய்ப்புகளை தவற விடாமல் நடித்து வருகிறார்.
இந்நிலையில் காமெடி நடிகராகவும், vj-வாகவும் வலம் வந்துகொண்டிருந்தவர் நடிகர் ஆர் கே பாலாஜி இவர் ஹீரோவாக அறிமுகமான படம் எல்கேஜி இப்படத்தில் கதாநாயகியாக பிரியா ஆனந்த் நடித்திருந்தார். இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இதனைத் தொடர்ந்து ஆர் கே பாலாஜி புதிய படமொன்று இயக்குகிறாராம் அதில் மீண்டும் பிரியா ஆனந்த் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.அதுமட்டுமல்லாமல் ஆர் கே பாலாஜி படம் என்றால் டபுள் ஓகே என்று பிரியா ஆனந்த்.