சினிமாவைப் பொருத்தவரை சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் மட்டுமே சினிமா உலகில் நீண்ட தூரம் பயணிக்க முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். அதனை தற்போது வரையிலும் சரியாக பயன்படுத்தி சிறப்பான கதை அம்சங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகை திரிஷா. இவர் சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
மேலும் சிறப்புக்குரிய படங்களின் முலம் வெகு விரைவிலேயே முன்னணி நடிகர்களான ரஜினி ,அஜித் ,விஜய் ,விக்ரம் ,சிம்பு போன்றவர்களுடன் ஜோடி போட்டு நடித்தன் மூலம் அவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தார் மேலும் தற்பொழுது வரையிலும் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த 96 படம் இவருக்கு மேலும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்தது இத்திரைப்படத்தை தொடர்ந்து தற்போது அவர் ராங்கி, கர்ஜனை, பரமபதம் போன்ற படங்களில் நடித்து வருகிறார் மேலும் தற்போது பொன்னியின் செல்வன் போன்ற பிரபல படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த உலகில் ஒருவரை போல இன்னொருவர் இருப்பதை நாம் பார்த்துள்ளோம் அதுபோலதான் தற்பொழுது நடிகை திரிஷா போல அச்சு அசல் அவரைப் போலவே இருக்கிற ஒரு பெண்னின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.