13 மொழிகளில் உருவாகும் ‘சூரியா 42’ படத்தில் இணைந்த இளவரசி நூர்ஜஹான்.!

surya-42

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூர்யா தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார் அந்த வகையில் தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் இவருடைய 42வது திரைப்படம் உருவாகியிருக்கிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் சீதாராமம் திரைப்படத்தின் இளவரசி நூர்ஜகான் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான வரலாற்று காதல் திரைப்படமாக சீதாராமம் திரைப்படம் வெளியானது இந்த படத்தை ராகவபுடி என்பவர் எழுதி இயக்கியுள்ளார் மேலும் இந்த படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்த இவருக்கு ஜோடியாக நடிகை மிருணாள் தாகூர் நடித்திருந்தார். இவர்களை அடுத்து ராஷ்மிகா மந்தனா, சுமந்த் ஆகியோர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

நடிகை மிருணாள் இளவரசி நூர்ஜகான் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார் இவருடைய நடிப்பிற்கு  பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்த நிலையில் அடுத்தடுத்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் தற்பொழுது சூரியன் 42 படத்தில் சரித்திர கால காட்சிகளில் இவர் நடிக்க இருப்பதாக கூறப்படுவதால் மீண்டும் இவர் இளவரசியாக நடிக்க வாய்ப்பு உள்ளது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

mirunal
mirunal

அவர் நடிக்க இருக்கும் காட்சிகளின் படப்பிடிப்புகள் அடுத்த மாதம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் மிருணாள் தாகூர் மட்டுமின்றி பல அகில இந்திய பிரபலங்களும் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு தமிழ் உள்பட 13 மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கு ‘வீர்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களை அடுத்து சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்துவரும் நிலையில் யோகி பாபு உள்ளிட்ட ஏராளமான பிரபலங்களும் நடித்து வருகின்றனர் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையில் நிலையில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாக்கப்பட்டு வருகிறது.