தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கடுமையாக விமர்சனத்தை பெற்று தோல்வியை சந்தித்தது.
இந்த தோல்வியினால் நடிகர் சிவகார்த்திகேயன் தலை காட்ட முடியாமல் போனது அந்த அளவிற்கு பிரின்ஸ் திரைப்படம் மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்தது. இவர் நடிப்பில் வெளியான டாக்டர் மட்டும் டான் ஆகிய இரண்டு படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து உள்ள நிலையில் இந்த படமும் வெற்றி பெறும் என எண்ணி இருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தந்தது பிரின்ஸ் திரைப்படம்.
இந்த நிலையில் பிரண்ட்ஸ் திரைப்படம் போட்ட காசை எடுக்க முடியாமல் போனதால் அடுத்த படத்தை தயாரிக்க திணறி வருகிறார் சிவகார்த்திகேயன். அடுத்ததாக சிவகார்த்திகேயன் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வெற்றி பெறாததால் மாவீரன் படம் எப்படியாவது வெற்றி அடைய வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
பிரின்ஸ் திரைப்படத்தில் இழந்த மார்க்கெட் மாவீரன் திரைப்படத்தின் மூலம் சரி கட்ட நினைக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். மேலும் பிரின்ஸ் திரைப்படத்தின் தோல்வியால் மாவீரன் படத்திற்கு சிக்கல் வர நிறைய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் கலக்கத்தில் இருக்கும் சிவகார்த்திகேயன் இந்த பிரச்சனையை எப்படி தவிர்ப்பது என்று ஆலோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படி ஒரு தோல்வி படத்தை கொடுத்த சிவகார்த்திகேயன் இன்னொரு படம் கிடப்பிலையே கிடைக்கிறது இந்த நிலையில் எப்படியாவது ஒரு வெற்றி படம் கொடுத்தால் தான் கிடப்பில் கிடக்கப்பட்ட படம் வெளியாக வாய்ப்பிருக்கிறது என்றும் கூறி வருகின்றனர். இதனால் நடிகர் சிவகார்த்திகேயன் திரும்ப இடமெல்லாம் அடி வாங்கிக் கொண்டே இருக்கிறார் என்று கூறப்படுகிறது.