தமிழ் சினிமா உலகில் இருக்கும் உச்ச நட்சத்திர நடிகர்களுக்கு இந்த ஆண்டு நல்ல ஆண்டாக இருந்து வந்துள்ளது ஏனென்றால் அவர்கள் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளன குறிப்பாக அஜித்தின் வலிமை, விஜயின் பீஸ்ட், கமலின் விக்ரம், கார்த்தியின் பொன்னியின் செல்வன் என சொல்லிக்கொண்டு போகலாம்..
அந்த அளவிற்கு படங்கள் வெற்றி பெற்றுள்ளன அதேபோல நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் இந்த ஆண்டு நல்ல ஆண்டு இவர் நடிப்பில் தீபாவளி முன்னிட்டு வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் கூட வசூல் ரீதியாக வெற்றி அடைந்தது. இது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
சிவகார்த்திகேயன் தனக்கு என்ன வருமோ அது மாதிரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் குறைந்த திரைப்படங்களிலேயே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றதோடு மட்டுமல்லாமல் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்துள்ளார். இவர் நடிப்பில் இந்த தீபாவளிக்கு வெளிவந்த திரைப்படம் பிரின்ஸ்..
இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கினார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து உக்கரை நாட்டு நடிகை மரியா, சத்யராஜ், சூரி, பிரேம்ஜி கங்கை அமரன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பற்றி இருந்தாலும் மக்கள் கூட்டம் கூட்டமாக இந்த படத்தை பார்த்தனர் அதன் காரணமாக இந்த படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்தது.
இப்படி இருக்கின்ற நிலையில் இதுவரை பிரின்ஸ் திரைப்படம் உலகம் முழுவதும் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் தற்போது வரை மட்டுமே இந்த திரைப்படம் 50 கோடி வசூலை தொட்டு இருப்பதாக கூறப்படுகிறது. வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் கூடும் என்பதால் படக்குழுவும் சரி, சிவகார்த்திகேயனும் சரி செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர்.