தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தல அஜித். இவர் தற்போது இளம் இயக்குனரான வினோத் உடன் இணைந்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் இத்திரைப்படத்தை போனி கபூர் அவர்கள் தயாரித்து வருகிறார்.தற்பொழுது இவர் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர் என்ற இடத்தை பிடித்து கொண்டதோடு மட்டுமல்லாமல் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டு தற்போது நிலைத்து நிற்கிறார்.
ஆனால் இவர் ஆரம்ப காலத்தில் பல தடைகளையும், சிக்கல்களையும் சந்தித்திருந்தாலும் அதனையெல்லாம் தனது திறமையின் மூலம் தவிடுபொடியாக்கி தற்போது உச்ச நட்சத்திரம் என்ற அந்தஸ்தை பெற்று வைத்து நிற்கிறார் தல அஜித். அஜித் வளர்ந்து வரும் காலத்தில் பல இன்னல்களை சிந்தித்து வந்தார் அந்தவகையில் வளர்ந்து வரும் நேரத்தில் நிகழ்ச்சி ஒன்றிக்கு சென்றபோது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வாரிசை நடிகரான பிரஷாந்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அப்பொழுது அஜித் அவர்களை ஓரமாக நிற்க வைத்தனர்.
அந்த இடத்தில் அஜித் என்ன செய்வதறியாமல் தலைகுனிந்து ஓரமாக நின்றார் ஆனால் அஜித் அவர்கள் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனக்கு திரை உள்ளது தன்னாலும் ஒரு நாள் சிறந்த நடிகராக வரும் முடியும் நினைத்து கொண்டார்.சினிமா உலகில் அதனை செய்து காட்டி தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கினார்.
ஒருவர் அவமானப்பட்டு கோழைத்தனமாக மாறுவதை விட தன்னம்பிக்கை மற்றும் திறமையை வளர்த்துக் கொண்டால் ஒரு நாள் நிச்சயம் வளர முடியும் என்பதனை நிரூபித்துக் காட்டினார் தல அஜித் தற்பொழுது அவரை உச்ச நட்சத்திரமாக அமர வைத்துள்ளது தமிழ் சினிமா.பாலிவுட் சினிமாவில் சுஷாந்த் சிங் எந்த அளவிற்கு திரை உலகினர் ஒதுக்கினார்களோ அதைவிட பலமடங்கு அஜித் அவர்களையும் ஒதுக்கி உள்ளனர் மேலும் பல அவமானங்களையும் படுத்தி உள்ளார் இவர் நடிக்க வேண்டிய பல திரைப்படங்களில் வேறு நடிகர்களுக்கு கை மாறி ஹிட்டடித்தது நாம் அனைவரும் அறிந்தது.