ஆரியன் கானை தொடர்ந்து பிரபல நடிகையை குறிவைக்கும் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள்.? எப்படி கண்டு பிடித்தனர் தெரியுமா.?

sharukhan-and-ariyan-khan
sharukhan-and-ariyan-khan

பாலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருபவர் ஷாருக்கான் இவர் 90 காலகட்டங்களில் இருந்து தற்போது வரையிலும் பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார் மேலும் இவர் சினிமாவையும் தாண்டி இந்திய அளவில் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட்டில் கேகேஆர் அணியின் ஓனராக ஷாருக்கான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல விளம்பரப் படங்களுக்கும் இவர் நடித்து வருகிறார் இது மட்டுமல்லாமல் பல நலத்திட்ட உதவிகளையும் செய்து வருபவர் ஷாருக்கான் என்பது குறிப்பிடத்தக்கது தற்போது கூட இவர் அட்லி உடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படி எல்லாத்திலேயும்வெற்றிகண்டு வந்தாலும் ஷாருக்கான் மகன் ஆரியன் கான் செய்த தவறால் தற்பொழுது பல கோடிகளை இழந்து நிற்கின்றார்.

மேலும் பல நிறுவனங்கள் இந்த காரணத்தை சொல்லி தற்போது அவரிடம் இருந்து நைசாக விலகியும் உள்ளது ஷாருக்கானுக்கு இது எல்லாம் பிரச்சனையில்லை தனது மகனை எப்படி வெளியில் எடுக்க வேண்டும் என்பதையே பெரிதும் யோசித்து வருகிறார். அண்மையில் ஷாருக்கான் மகன் ஆரியன் கான் கப்பலில் போதை பார்ட்டி கொண்டாடியுள்ளார்.

அப்போது விரைந்து வந்த போலீஸ் அனைவரையும் பிடித்தது அதில் ஒருவராக ஆரியன் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று ஷாருக்கான் தனது மகனை சிறைக்கு சென்று பார்த்துள்ளார் பின் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரின் வீட்டுக்கு விரைந்து வந்த சோதனையும் நடத்தி விட்டனர். மேலும் அதிகாரிகள் ஆரியன் கான் மொபைலை தற்போது கையில் எடுத்து சோதனை செய்ய ஆரம்பித்துள்ளனர்.

இவருடன் வேறு யாராவது போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்பு இருக்கிறார்களா என்று பார்த்து வருகின்றனர். வாட்ஸ் அப் பரிமாற்றத்தில் அனன்யா பாண்டேவின் பெயரும் இடம்பெற்றுள்ளது தற்போது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது மேலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.