பூஜா ஹெக்டேவின் கவர்ச்சி புகைப்படத்தை பங்கமாக கலாய்த்த பிரேம்ஜி.!

pooja-hegde-1

சினிமாவில் அறிமுகமாகியுள்ள வெள்ளித்திரை நடிகைகள் முதல் சின்னத்திரை நடிகைகள் வரை அனைவரும் தொடர்ந்து தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் இதன் மூலம் இவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதோடு மட்டுமல்லாமல் நடிகைகளும் பலர் இதன் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்தும் வருகிறார்கள்.

அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பூஜா ஹெக்டே. இவர் தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.இந்த திரைப்படம் இவருக்கு வெற்றியை தரவில்லை மேலும் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதனால் தெலுங்கு சினிமாவில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

மேலும் இவருக்கு தெலுங்கில் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. அந்த வகையில் தெலுங்கில் வெளியான புட்ட பொம்மா என்ற பாடல் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான இவர் தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார். இப்படிப்பட்ட நிலையில் இவருக்கு நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இவர் நடித்திருந்த இந்த திரைப்படமும் கலவை விமர்சனத்தை பெற்றது இப்படிப்பட்ட நிலையில் பூஜா தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று வருகிறார்.மேலும் பல மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர் ஒரு பக்கம் சோசியல் மீடியாவில் புகைப்படங்கள் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

pooja hegde
pooja hegde

இவருக்கு மில்லியன் கணக்கில் பாலோசர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் தற்பொழுது படப்பிடிப்புகளை முடித்துவிட்டு களைப்போடு படுத்துக் கொண்டிருக்கும் எடுத்துக்கொண்ட செல்பியை பகிர்ந்துள்ளார் இது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பலரும் பலவிதமான கமெண்ட்களை தெரிவித்து வந்தார்கள்.

premji
premji

அந்த வகையில் பிரபல நடிகரான பிரேம்ஜி அவர்களும் கமலஹாசன் அவர்களின் நாயகன் திரைப்படத்தில் வரும் சிறிய வீடியோவை பகிர்ந்து கலாய்த்துள்ளார். இவ்வாறு பிரேம்ஜி கலாய்த்த டுவிட்டர் பதிவு தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.