நடிகர் பிரேம்ஜி இன்னும் 5 ஆண்டுகளில் என்னையும் சிம்புவையும் தவிர மற்ற எல்லோருக்கும் திருமணம் ஆகியிருக்கும் என்று நகைச்சுவையாக போட்ட பதிவு ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் பிரேம்ஜி எனக்கு திருமணமே வேண்டாம் எனக்கூறி கொண்டு வெளியே சுற்றிக் கொண்டே இருக்கிறார் ஆனால் அவர்கள் குடும்பத்தார் எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என பெண் பார்த்து வருகிறார்கள். இந்த முறை அதிக தீவிர முயற்சியுடன் களம் இறங்கியுள்ளார்கள் என்ற நிலையில் பிரேம்ஜி அவர்களுக்கு தற்போது 43 வயது ஆகிவிட்டது.
இன்னும் திருமணம் மட்டும் நடக்கவில்லை எப்பொழுது திருமணம் என்பது புரியாத புதிராக இருக்கிறது. பிரேம்ஜி அடிக்கடி சமூக வலைதளமான டுவிட்டரில் ஏதாவது ஒரு காமெடியாக பதிவை வெளியிட்டு வருவார் அந்த வகையில் தற்போது தனக்கு தானே கலாய்க்கும் ட்வீட்களை பதிவு செய்துள்ளார்.
தற்போது அவர் பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது ஏனென்றால் இன்னும் ஐந்து வருடம் கழித்து அனைவருக்கும் திருமணம் ஆகியிருக்கும் ஆனால் எனக்கும் சிலம்பரசனுக்கு மட்டும் இல்லை என்று பதிவு செய்துள்ளார் இதை பார்த்த சிம்பு ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
ஒரு சில ரசிகர்கள் கோபப்பட்டாலும் ஒரு சில ரசிகர்கள் மிகவும் காமெடியாக இந்த ட்வீட்டுக்கு கமெண்ட்களை செய்து வருகிறார்கள். மேலும் ஒரு சில ரசிகர்கள் உங்கள் லிஸ்டில் திரிஷா விஷாலை விட்டுவிட்டீர்களே என காமெடியாக கமென்ட் செய்துள்ளார்கள்.
😬😬😬 @SilambarasanTR_ pic.twitter.com/d2UbOCXuFl
— PREMGI (@Premgiamaren) March 9, 2022