ப்ரேமம் படத்துக்கு எதுக்குப்பா அஜித்-விஜய்.! இந்த நடிகரே போதும் என கடுப்புடன் பதில் சொன்ன பிரபல இயக்குனர்.!

ajith-vijay
ajith-vijay

premam director speak about ajith vijay :  மலையாள சினிமாவில் நிவின்பாலி நடிப்பில் வெளியாகி திரைபடம் பிரேமம், இந்த திரைப்படத்தில் மூன்று விதமான காலகட்டங்களில் உருவாகும் காதல் பற்றி மிகவும் சுவாரசியமாக எடுத்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்தில் நிவின் பாலியுடன் சாய் பல்லவி,  மடோனா செபஸ்டியன்,  அனுபமா பரமேஸ்வரன் என பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் நடித்திருந்தார்கள், பிரேமம் படத்தை நேரம் திரைப்படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் தான் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

அதுமட்டுமில்லாமல் இந்த இயக்குனர் பிரேமம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டதால் பிரபல நடிகைகள் மற்றும் நடிகர்கள் பிரபலங்கள் என அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரேமம் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனை  பலரும் பேட்டி எடுத்து வருகிறார்கள் அந்த பேட்டியில் பிரேமம் படத்தை தமிழில் ரீமேக் செய்தால் அஜித் மற்றும் விஜய் இவர்களில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என கேட்டுள்ளார்கள். அதற்கு உடனே அல்போன்ஸ் புத்திரன் டென்ஷனாகி பேசினார்.

அவர் பேசியதாவது ஏன் எதற்கெடுத்தாலும் அஜித் விஜய் பற்றி பேசுகிறீர்கள் அவர்களை பற்றி பேசுவதை நிறுத்துங்கள் எனவும் கதாபாத்திரத்திற்கு யார் சரியாக  இருக்கும் என்பதை இயக்குனர்களுக்கு தெரியும் என டென்ஷனாக பேசினார், மேலும் தமிழில் பிரேமம் திரைப்படத்தை ரீமேக் செய்தால் கண்டிப்பா நடிகர் தனுஷை வைத்து தான் எடுப்பேன் என கூறியுள்ளார்.

அது மட்டுமில்லாமல் மூன்று விதமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு சரியான தேர்வு தனுஷ் மட்டுமே என கூறியது தனுஷ் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.