தமிழ் திரை உலகில் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகர்களில் நடிகர் நிவின் பாலி ஒருவர். அந்த வகையில் இவர் நடித்த பிரேமம் என்ற திரைப்படம் மனது ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்ததுமட்டுமில்லாமல் இவர் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தற்போது திரை உலகில் விதவிதமான வித்தியாசமான கதையம்சம் உள்ள திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் மலையாளத்தில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்து விட்டார்.
அந்த வகையில் சமீபத்தில் நிவின்பாலி படத்தில் நடிப்பதற்கு நடிகை தேவை என்ற விளம்பரத்தை பார்த்து தான் நான் நடிகையான என்று கூறியதன் காரணமாக இந்த செய்தியை சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த நடிகை வேறு யாரும் கிடையாது தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி தான்.
ஆனால் இவர் தனுஷுடன் நடித்த இத்திரைப்படம் ஆனது ஓரளவிற்கு மற்றும் வெற்றியை கொடுத்து தமிழ் சினிமாவில் இவரை தக்கவைத்துள்ளது. என்னதான் தமிழில் சொதப்பலான திரைப்படத்தில் நடித்திருந்தாலும் தெலுங்கில் இவருக்கு மாபெரும் ரசிகர் கூட்டமே உள்ளது.
அந்த வகையில் தற்போது நமது நடிகை பகத் பாசில் நடிப்பில் உருவாகும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். மேலும் தனது திரை உலகில் உள்ள பெரிய நடிகர்களுடன் நடிக்க வேண்டுமென்ற ஆசை எல்லாம் எனக்கு கிடையாது முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்தால் மட்டுமே போதும் என்று கூறியுள்ளார்.