தளபதி விஜய் சமீபத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார் இவர் விஜயுடன் நடிக்கும் முதல் திரைப்படம்.
தளபதி விஜய் சமீபகாலமாக புது புது இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் விஜய் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் வசூலில் மிகப்பெரிய சாதனையை செய்து வருகிறது அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் பல இடங்களில் வசூல் வேட்டை நடத்தியது.
அதுமட்டுமில்லாமல் இந்தியாவைத் தாண்டி சக்கை போடு போட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்த புதுமுக இயக்குனர் நெல்சன் அவர்களுடன் இணைந்து பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிதாக பாதிப்பு இல்லை என கூறி வருகிறார்கள்.
நெல்சன் திலீப்குமார் இதற்கு முன் கோலமாவு கோகிலா டாக்டர் ஆகிய திரைப்படங்களை கொடுத்துள்ளார் அந்த வகையில் பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பேமிலி ஆடியன்சை வெகுவாக கவர்ந்துள்ளது. பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி அவர்கள் இயக்கத்தில் தளபதி 66 திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார் இயக்குனர் வம்சி. இந்த நிலையில் விஜய்யுடன் முதன் முறையாக நேரடி தமிழ் திரைப் படத்தில் இணைந்துள்ளார். மேலும் இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உருவாக இருக்கிறது. இத்திரைப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துவருகிறார்..
தளபதி 66 திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது அந்த பூஜையில் ரஷ்மிகா மந்தனா விஜய்யை உருவி ஒரு முத்தம் கொடுத்தார் அந்த வீடியோவும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆனது. இந்த நிலையில் பிரேமம் பட இயக்குனர் பற்றி விஜய் ஒரு சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார் ஒரு நாள் பிரேமம் இயக்குனர் வீட்டிற்கு வந்துள்ளார். தளபதி விஜய்யோ தனக்கு தான் கதை கூற போகிறார் என்று ஆவலுடன் இருந்துள்ளார். ஆனால் வீட்டுக்கு வந்த ப்ரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் விஜியின் மகன் சஞ்சய்க்கு கதையை கூறியுள்ளார்.
ஆசை ஆசையாக இருந்த விஜய்க்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.