Vijayakanth: நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் படைத்தலைவன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் இதுகுறித்து பிரபல யூடியூப் சேனலுக்கு நடிகை பிரேமலதா சண்முக பாண்டியன் குறித்து அளித்திருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் படைத்தலைவன் என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் சண்முக பாண்டியன் குணம் குறித்து பிரேமலதா பேசியிருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் சண்முக பாண்டியனும் பல தகவல்களை பகிர்ந்து உள்ளார்.
அப்படி சண்முக பாண்டியன் கூறியதாவது, எப்பொழுதுமே அம்மாவுடன் தான் இருப்போம் ஆனால் அம்மா ரொம்பவே ஸ்ட்ரீட் எந்த விஷயத்தையும் செய்ய விட மாட்டாங்க அதுக்காகவே அப்பா எப்போ வீட்டுக்கு வருவார் என பார்த்துகிட்டு இருப்பேன்.. அப்பா வந்த உடனே அவர் கூட ஜாலியா சண்டை போடுவேன், சம்மர் சால்ட் பல்டி வீட்டில் குரங்கு போல ராக் மேல எல்லாம் ஏறி தொங்கி விளையாடி குதிக்க எல்லாம் அப்பாதான் ஆலோ பண்ணுவாரு எப்பவுமே பயப்படக்கூடாது தைரியமாக இருக்கணும்னு சொல்லி சொல்லி வளப்பாரு என சண்முக பாண்டியன் தனது தந்தை விஜயகாந்த் பற்றி கூறியுள்ளார்.
மேலும் கேப்டன் நல்லா இருந்த வரைக்கும் வீட்டிலேயே இருக்க மாட்டார் சினிமா இருக்கும்போது ஷூட்டிங் போயிடுவார் அந்த படத்தை முடிச்சிட்டு தான் வருவாரு அவருக்காக ரொம்பவே ஏங்குவோம் அரசியல் பணிகள் ஆரம்பித்த போது கூட மக்களுக்காக தான் ஓடிக்கொண்டே இருப்பார். ஆனால் இப்போ உடம்பு முடியாத நிலையில் எங்க உடன்தான் 24 மணி நேரமும் இருக்காரு அதை நினைத்து சந்தோஷப்படுவதானே தெரியல என்று கூறியுள்ளார்.
சண்முக பாண்டியன், விஜய் பிரபாகரன் இருவருமே அவங்க அப்பாவை அப்படி பார்த்துப்பாங்க எந்த கூச்சமும் படாமல் சண்முக பாண்டியன் கேப்டன் டாய்லெட் போனா கூட கழுவி விடுவார். அதே மாதிரி குளிப்பாட்டி கிளீனா வச்சுப்பாங்க நாலாம் அதை பண்ண மாட்டேன் இரண்டு பேருமே எப்போதும் மூஞ்சி காட்டினதே இல்லை அந்த அளவுக்கு அப்பா மேல உயிரே வச்சிருக்காங்க என்ன பிரேமலதா கூறியுள்ளார்.