குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து கவலை மறந்த பெண் கர்ப்பம்.?

cook with komali
cook with komali

விஜய் டிவியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரின் கவனத்தை திசைதிருப்பி டிரஸ் பஸ்சர் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி முதல் சீசன் சமையல் நிகழ்ச்சியாக தொடங்கப்பட்டது அதில் சமையல் தெரிந்த பிரபலங்களுடன் சமையல் தெரியாத விஜய்டிவி.

பிரபலங்களை இறக்கி நடத்திவந்தனர் முதல் சீசன் எதிர்பார்க்காத அளவு மக்கள் மத்தியில் ரீச் அடைந்ததை அடுத்து அடுத்தடுத்த சீசன்களில் காமெடியை மையமாக வைத்து சிறப்பாக எடிட் செய்து ஒளிபரப்பி வருகின்றனர். இதில் கோமாளியாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை போன்ற பலரும் கலந்துகொண்டு மக்களை என்டர்டைன்மென்ட் செய்து வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் நடுவராக செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருந்து வருகின்றனர் இவர்களும் கோமாளி உடன் சேர்ந்து காமெடி நிகழ்ச்சியை மேலும் சிறப்பிக்கின்றனர். இந்த நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி மூன்றாவது சீசனின் இந்த வார எபிசோடின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் செப் வெங்கடேஷ் பட் ஒரு அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

அவர் கூறியது வெளியில் என்னை பலரும் சந்தித்து இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இருக்கிறது எங்களது கஷ்டத்தை மறந்து மகிழ்ச்சியாக இருக்கின்றோம் இந்த நிகழ்ச்சியை பார்த்து என கூறியுள்ளனர். அதில் ஒருவர் கூறியது இந்தக் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்து தான் நான் கர்ப்பம் ஆனேன் என்று கூறியுள்ளார். அந்தப் பெண் 8 வருடமாக குழந்தை இல்லாமல் இருந்த நிலையில் ஒரு மருத்துவமனைக்கு சென்றபோது..

அங்கு குழந்தையோடு வந்த ஒரு பெண் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்த பின்புதான் எனது கவலை மறந்து கர்ப்பமாகி குழந்தை பெற்று உள்ளேன் அதனால் நீயும் அந்த நிகழ்ச்சியை பார் என கூறியுள்ளார் அதை அடுத்து தற்போது இந்த பெண் கர்ப்பமாக உள்ளதாக செஃப் வெங்கடேஷிடன் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படும் வைரலாக பரவி வருகிறது.