சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ள நடிகைகள் முதல் தொகுப்பாளர்கள் வரை அனைவரும் தங்களது சோசியல் மீடியாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் அந்த வகையில் கவர்ச்சியான புகைப்படத்தினை தாண்டி திருமணமான போட்டோஷிப் நடத்துவதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் சமீப காலங்களாக கர்ப்ப காலத்தில் எடுக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு ட்ரெண்டிங்காகி வருகிறார்கள்.சொல்ல போனால் ஒரு சில நடிகைகள் தண்ணீருக்குள் இறங்கி போட்டோ ஷூட் நடத்தி இருப்பதை பார்த்தோம். அந்த வகையில் தற்பொழுது சன் டிவியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக பணியாற்றி பிரபலமடைந்தவர் தான் தொகுப்பாளினி தியா மேனன்.
இவர்தான் தற்பொழுது கர்ப்பமாகவுள்ள நிலையில் தனது கணவருடன் இணைந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார் அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் லான்ச் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
சன் டிவினை தொடர்ந்து சூர்யா டிவியும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார் அதன் பிறகு சன் மியூசிக் சேனலில் கிரேசி கண்மணி, சுதா சுதா சென்னை மற்றும் கால் மேல காசு ஆகிய நிகழ்ச்சிகளை மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளார்.இப்படிப்பட்ட நிலையில்தான் இவர் சிங்கப்பூரை சேர்ந்த கிரிக்கெட் வீரர் கார்த்திக் சுப்பிரமணியன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு பெரிதாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்காமல் இருந்து வந்த இவர் தற்பொழுது கர்ப்பமாக இருந்து வருகிறார். சமீபத்தில் தனது கணவருடன் இணைந்து கொண்ட புகைப்படத்தை தனது சோசியல் மீடியாவில் வெளியிட ரசிகர்கள் அனைவரும் தியா மேனனுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.