நடிகர் பிரதாப் போத்தன் சினிமா உலகில் காமெடியனாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலம் அடைந்துள்ளார். மூடுபனி, வறுமையின் நிறம் சிவப்பு, தில்லுமுல்லு, வாழ்வே மாயம் என சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் நடிப்பதையும் தாண்டி இயக்குனர் அவதாரம் எடுத்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இயக்குனராக மீண்டும் ஒரு காதல் கதை என்ற படத்தை இயக்கி அறிமுகமானார்.
அதன்பின் கமலை வைத்து வெற்றி விழா, நெப்போலியனை வைத்து சீவலப்பேரி பாண்டி போன்ற சிறந்த நடிகர்களை வைத்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இப்படி தமிழ் சினிமாவில் பன்முகத்தன்மை கொண்டவராக இருந்த பிரதாப் போத்தன் நேற்று அதிகாலை மரணமடைந்தார். இந்த செய்தி தமிழ்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியது.
குறிப்பாக சினிமா பிரபலங்களை ரொம்ப கவலை அடைய செய்கிறது இவரது இறப்பு செய்தியை கேட்டு இயக்குனர் மணிரத்தினம் கமலஹாசன் உள்பட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர் இவர் இறப்பதற்கு முன்பாக பேஸ்புக்கில் சில பதிவுகளை போட்டுள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது.
நீங்கள் ஒரு நோயின் காரணத்தை சரியாக கண்டுபிடித்து குணப்படுத்தாமல் அதன் அறிகுறிகளை மட்டும் குணப்படுத்தி வருகிறீர்கள் என்றால் நீங்கள் மரணம் வரை மருந்துகளை தான் நம்பி இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.மற்றொரு பதிவில் சிலர் அதிகமாக அக்கறை காட்டுவார்கள் ஆனால் என்னை பொருத்தவரை அது காதல் என்பேன் வாழ்க்கை என்பது கடைசி வரை கட்டணங்களை செலுத்தியே கழிந்து விடும் என்று தெரிவித்தவர். இருப்பதற்கு முன்பாக சில பதிவுகளை போட்டு ரசிகர்களையும் அழ வைத்துள்ளார் பிரதாப் போதன்.