சஸ்பென்ஸ், ஆக்ஷன் இயக்குனருடன் கைகோர்க்கும் பிரசாந்த்.! எகிறிய எதிர்பார்ப்பு!!

prashanth
prashanth

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். இவர் 1990ம் ஆண்டு வைகாசி பிறந்தாச்சு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைக்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் தமிழ் ,தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் ஆரம்ப காலத்திலேயே நடிக்கத் தொடங்கியவர் நடிகர் பிரசாந்த்.

இவரது காலகட்டத்தில் முன்னணி நடிகர்களான அஜித், விஜய் அவர்களுக்கு கடும் சவாலானவராக திகழ்ந்தவர் நடிகர் பிரசாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றன இருப்பினும் சமீபகாலமாக சரியான படங்களை தேர்ந்தெடுக்க தோல்விகளை சந்தித்த இந்த நிலையில் அவருக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு வந்தது.

சமீபத்தில் ஹிந்தியில் வெளியான அந்தாதுன். என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது அதுமட்டுமில்லாமல் சுமார் 456 கோடி வசூலில் சாதனை படைத்தது. இப்படத்தின் பட்ஜெட் சுமார் 32 கோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது இதனை தமிழில் ரீமிக்ஸ் செய்யப்படவுள்ளது படத்தில் ஹீரோவாக பிரசாந்த் அவர்கள் நடிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

இப்படத்தை இயக்குனர் மோகன் ராஜா அவர்கள் இயக்க உள்ளதாக மேலும் தகவல் வெளியாகி உள்ளது. மோகன் ராஜா அவர்கள் அவரது தம்பியான ஜெயம் ரவி வைத்து தனி ஒருவன் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகின ஆனால் ஜெயம் ரவி அவர்கள் பொன்னின் செல்வன் என்ற படத்தில் தற்போது பிஸியாக நடித்து வருவதால் ராஜா அவர்கள் பிரசாந்தை வைத்து அந்தாதுன் ரீமேக் படத்தை இயக்குவார் என தெரிய வருகிறது.

Prashanth
Prashanth

இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைஉலகில் மீண்டும் முன்னணி நடிகராக வலம் வருவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த கூட்டணி அமைந்தால் மிகச்சிறப்பாக இருக்கும் எனவும் தெரிவித்து வருகின்றனர். அஜித் விஜய் போல் வரவேண்டுமென்றால் முன்னணி இயக்குனர்களின் படத்தில் நடியுங்கள் என்றும் தெரிவித்து வருகின்றனர்