களத்துல இரண்டு முறை நான் தான் கில்லி வா மூணாவது முறையும் மோதிப் பார்க்கலாம்.! பாட்ஷாவுடன் மல்லுக்கு நிற்க்கும் பிரஷாந்த் நீல் .

prashanth neel
prashanth neel

Prashanth Neel : பிரசாந்த் நீல் திரைக்கதை எழுத்தாளராகவும் திரைப்பட இயக்குனராகவும் வலம் வருபவர் இவர் இயக்கத்தில் வெளியாக்கிய திரைப்படங்கள் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியை நிலைநாட்டியது அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு உக்கிரம் என்ற திரைப்படத்தை கன்னட மொழியில் இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு கேஜிஎப் முதல் பாகத்தை இயக்கினார் இந்த திரைப்படம் வெளியாகி ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

ஏனென்றால் இதற்கு முன்பு சினிமாவில் மிகவும் பின்தங்கிய நிலையில் கன்னட சினிமா இருந்தது இந்த திரைப்படத்தின் மூலம் கன்னட சினிமாவையே தலை நிமிர செய்தது அந்த அளவு கேஜிஎப் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து கேஜிஎப் இரண்டாவது பாகம் வெளியானது இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பு பெற்றது.

அப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது பிரபாஸ் அவர்களை வைத்து சலார் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். பிரசாந்த் நில் தன்னுடைய இயக்கத்தில் வெளியாகும் திரைப்படத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பவர் அந்த வகையில் தன்னுடைய திரைப்படம் வெளியாகிறது என முடிவு செய்துவிட்டால் எந்த திரைப்படம் எப்பொழுது வந்தாலும் பரவாயில்லை என தைரியமாக ரிலீஸ் செய்வார்.

அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு கே ஜி எஃப் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்தார்கள் ஆனால் அந்த சமயத்தில் ஷாருக்கான் அவர்களின் ஜீரோ திரைப்படமும் வெளியானது இந்த இரண்டு திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியாகி மோதிக்கொண்டது ஆனாலும் பிரசாந்த் நீல் இயக்கிய கேஜிஎப் திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது.

அதேபோல் மீண்டும் பிரசாந்த் நீல் கே ஜே எப்  இரண்டாவது பாகத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தை விஜய் நடிப்பில் வெளியாகிய பீஸ்ட் திரைப்படத்துடன் மோதவிட்டார் கேஜிஎப் இரண்டாவது பாகத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படி இரண்டு முறை யார் திரைப்படம் வெளியானாலும் பரவாயில்லை என மிகவும் தைரியமாக படத்தை வெளியிட்டார்கள்.

அந்த வகையில் மூன்றாவது முறையாக மீண்டும் ஷாருக்கான் அவர்களுடன் மோத இருக்கிறார் பிரசாந்த் நீல் ஏற்கனவே முதல் முறையாக  கேஜிஎப்-ஜீரோ மோதியது இந்த நிலையில் இரண்டாவது முறையாக பிரபாஸ் அவர்களை வைத்து இயக்கிய சலார் திரைப்படமும் ஷாருக்கானின் டுங்கி ( dunki) திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

ஷாருக்கானுக்கு ஏற்கனவே ஜவான் பதான் ஆகிய திரைப்படங்கள் நல்ல வெற்றி படங்களாக அமைந்துள்ளது இந்த நிலையில் இந்த திரைப்படமும் மாபெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் பிரசாந்த் நீல் திரைப்படம் மக்களுக்கு வெகுவாக பிடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி சலார் திரைப்படம் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது இதே தேதியில் தான் ஷாருக்கானின் டங்கி வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.