விவேக்கை உதாசினபடுத்திய பிரசாந்த் மற்றும் விஜய்.! கை கொடுத்து தூக்கிய கறுப்பு சிங்கம்…

vivek
vivek

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டு இருந்தவர் நடிகர் விவேக். இவர் எந்த படத்தில் நடித்தாலும் அந்த படத்தில் இவருக்கான காட்சியில் நகைச்சுவையுடன் சேர்த்து கருத்துகளையும் திணித்து  மக்களுக்கு ஒரு நல்ல உணர்வை ஏற்படுத்துவார்.

அப்படி தனது கருத்துக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நகைச்சுவை நடிகர் விவேக் அவர்கள் தற்போது நம்மோடு இல்லை என்ற வருத்தம் அனைவருக்கும் இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் விவேக்கை அசிங்கப்படுத்திய இரண்டு ஹீரோக்கள் உள்ளார்கள்.

அதாவது விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற திரைப்படத்தில் நடிகர் விவேக் நடித்திருந்தார் அதில் நடிகர்களுக்கு கதை சொல்லும் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருக்கிறார். இதனால் அந்தப் படத்தின் இயக்குனர் ராமநாராயணன் உண்மையாகவே பெரிய ஹீரோவை நடிக்க வைத்து  அவரிடம் நீங்கள் இந்த கதையை சொல்லுவது போல் காட்சியை அமைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார்.

அதைக் கேட்ட விவேக் சரி என்று கூறிவிட்டார். ஆனால் இந்த கதையை எந்த நடிகரிடம் சொல்வது என்ற குழப்பத்தில் இருந்தால் அப்போது மார்க்கெட்டில் உள்ள இளம் நடிகர்களை அணுகியுள்ளார். அதில் ஒருவர் தான் நடிகர் பிரசாந்த் அவரிடம் இந்த கதையை கூறிவிட்டு அவரிடம் கேட்கும் போது நான் வீட்டில் கேட்டுவிட்டு சொல்கிறேன் என்று கூறிவிட்டாராம்.

அதன் பிறகு நடிகர் விஜய் இடம் கேட்டு இருக்கிறார் அந்த நேரத்தில் நடிகர் விஜய் ஒரு வளர்ந்து வரும் நடிகராக இருந்திருக்கிறார். இதனால் நடிகர் விஜய் அவர்கள் நான் இப்போதுதான் வளர்ந்து வருகிறேன் இதுபோல எல்லோரிடமும் நடித்தால் எனது மார்க்கெட் குறைந்து விடும் இதனால் என்னால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். இந்த இரண்டு நடிகர்களும் கூறியது நடிகர் விவேக் அவர்களுக்கு கொஞ்சம் மனம் வருத்தமாக தான் இருந்ததாம்.

ஆனால் இதே கதையை நடிகர் விஜயகாந்திடம் கூறிய போது உடனே ஒப்புக்கொண்டாராம். நடிகர் விஜயகாந்த் சும்மாவே அனைவருக்கும் உதவும் குணம் உடையவர் அந்த வகையில் நடிகர் விவேக் போன்ற நடிகர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர் கூறிய உடனே அந்தப் படத்தில் நடித்து கொடுத்தாராம் நடிகர் விஜயகாந்த்.

இதை நடிகர் விவேக் அவர்கள் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கூறியது அந்த நடிகர்களை அசிங்கப்படுத்துவதற்காக இல்லை நான் கேட்டு இதுவரை எந்த ஒரு நடிகரும் இல்லை என்று சொன்னது கிடையாது இவர்கள் இப்படி சொன்னது எனக்கு கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது என்ற விதத்தில்தான் கூறியுள்ளாராம்.