தற்போது விஜய் மாஸ்டர் திரைப்படத்தை முடித்து விட்டு தனது 65வது திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.அந்த வகையில் தளபதி 65ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா கட்டுப்பாடுகளுடன் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரசாந்த் நடித்து வரும் திரைப்படத்தில் விஜய் திரைப்படமான மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர் ஒருவரை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்துள்ளார்களாம். இந்த தகவல் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டிப் பறந்தவர் நடிகர் பிரசாந்த். இவர் ரஜினி நடிக்கும் காலகட்டத்தில் இவரும் முன்னணி நடிகராக வலம் வந்தார்.
அதோடு பெண் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார். ஆனால் இவர் வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் அவரால் தொடர்ந்து சினிமாவில் நீடிக்க முடியவில்லை. இவர் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வந்து போனதால் சினிமாவில் பெரிதாக ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார்.
பிறகு திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் இருந்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு கதைகள் ஒன்றும் அமையவில்லை. அதோடு இவருக்கென்று இருந்த மார்க்கெட் குறைந்து விட்டது ஒரு காலத்தில் பிரசாந்தை ரசிகர்கள் மறந்துவிட்டார்கள்.
பிறகு நடித்து வந்த சில படங்களும் வெற்றியை பெறாததால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் தற்பொழுது பாலிவுட்டில் சூப்பர் டூப்பர் ஹிட்டான அந்தாதூன் திரைப்படம் அந்தகன் என்ற பெயரில் தமிழ் ரீமேக் செய்யப்பட உள்ளது.
அந்தத் திரைப்படத்தில் பிரசாந்த் ஹீரோவாக நடிக்க உள்ளார். இவரை தொடர்ந்து சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி உட்பட இன்னும் பல பிரபலங்கள் இணைந்து நடிக்க உள்ளார்கள். அதோடு இத்திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் பிரசாந்த் மிகவும் கவனமாக தேர்வு செய்து வருகிறாராம்.
இந்நிலையில் விஜய் படமான மாஸ்டர் மற்றும் பிகில் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த பூவையாரை அந்தகன் திரைப்படத்தில் நடிக்க வைக்க உள்ளார்களாம். பூவையா இதற்கு முன்பே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார்.
இவ்வாறு பிரபலமடைந்த இவர் தற்பொழுது பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.