அதலபாதாளத்தில் கடந்த கன்னட சினிமாவை இந்திய அளவில் திரும்பி பார்க்க வைத்தவர் பிரசாந்த் நீல் இவர் கன்னட நடிகர் யாஷை வைத்து கேஜிஎஃப் என்னும் படத்தை எடுத்தார் முதல் பாகமே அதிரி புதிரி ஹிட் அடித்ததை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகத்தை எடுக்க வேண்டும் என சினிமா பிரபலங்கள் தொடங்கி ரசிகர்களை கேட்டுக் கொண்டனர்.
படக்குழுவும் உடனடியாக அதன் படத்தை எடுத்தது ஆனால் தொடர்ந்து அந்த படத்திற்கான சிக்கல் அதிகரித்ததால் இரண்டு வருடங்கள் கழித்து அண்மையில் தான் கே ஜி எஃப் 2 திரைப்படம் வெளியானது முதல் படத்தைவிட இரண்டாவது படத்தில் ஆக்க்ஷன் அதிகம் செண்டிமெண்ட் சீன் அதிகமாக இருந்ததால் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது அதன் காரணமாகவே இந்தியா முழுவதும் படம் சிறப்பாக ஓடியது.
வசூலில் 1000 கோடியை தொட்டு புதிய சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. கே ஜி எஃப் 2 படத்தை தொடர்ந்து அதன் மூன்றாவது பாகம் உருவாகும் என படம் முடியும் போது படக்குழு சொல்லியிருந்தது அதனால் பிரஷந்த் நீல் மற்றும் நடிகர் யாஷை பார்த்தால் போதும் சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் எப்பொழுது அடுத்த பாகம் என கேட்டுக் கொண்டு வருகின்றனர்.
இதற்கு இந்த படத்தின் தயாரிப்பாளர் கூறியது வெகு விரைவிலேயே கேஜிஎஸ் 3 எடுக்கப்படும் என கூறியிருந்தார் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக கூறினார் ஆனால் அடுத்தடுத்த ஹீரோவை வைத்து படம் பிரசாந்த் நில் படம் எடுப்பது இருப்பதால். KGF 3 எப்போது ரிலீஸ்ஸாக்கும் என்பது யாராலும் கணிக்க முடியாமல் இருக்கிறது.
பிரசாந்த் நீல் கே ஜி எஃப் 2 படத்தை தொடர்ந்து பிரபாஸுடன் கைகோர்த்து சலார் இந்த படத்தை உருவாக்கியுள்ளார் அதனை தொடர்ந்து இன்று பிறந்தநாள் காணும் ஜூனியர் என்டிஆர் அவர்களுக்கு வாழ்த்து சொல்லி அவருடன் அடுத்த படத்தில் இணைவதற்கான அறிவிப்பையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த இரண்டு படங்களையும் வெற்றிகரமாக எடுத்து முடித்து விட்டு பிறகுதான் பிரஷாந்த் நீல் கேஜிஎஃப் 3 படத்திற்கான வேலையை ஆரம்பிப்பார் என தெரிய வருகிறது. சொல்லப்போனால் பிரசாந்த் நீல் எட்டு வருடம் கழித்துதான் கே ஜி எஃப் 3 படம் ரிலீஸ் ஆகும் என கூறி உள்ளார். தயாரிப்பாளருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டு தான் இருக்கிறதாம்.