பல வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் ரொமாண்டிக் ஜோடி.! 90’s கிட்ஸ் ரசிகர்கள் கொண்டாட்டம்

simran

பாலிவுட்டில் பல ஹிட்டடித்த திரைப்படங்கள் தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்கிக் கொண்டு வருகிறது.

இந்நிலையில் பாலிவுட்டில் ஹிட்டான திரைப்படம் தான் அந்ததுன் இந்த திரைப்படத்தில் ஸ்ரீராம் ராகவன் என்பவரின் இயக்கத்தில் ஆயுஷ்மன், தபு, ராதிகா அப்டே உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

மேலும் இந்த திரைப்படத்தை தற்போது தமிழில் ரீமேக் செய்யப் உள்ளதாம் இந்த திரைப்படத்தை இயக்குனருமான நடிகருமான தியாகராஜனின் மகனான நடிகருமான பிரசாந்த் நடிக்க இருக்கிறாராம்.

இத்திரைப்படத்தை ஜோதிகா நடிப்பில் வெளியான பொன்மகள்வந்தாள் படத்தை இயக்கிய இயக்குனர் J.J. Fredrick  இயக்க உள்ளாராம்.

மேலும் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் தபு நடித்த நெகட்டிவ் ரோல் தான் என்றே கூறலாம் இந்த ரோலில் தற்பொழுது செம்ம துணிச்சலாக இடுப்பழகி சிம்ரன் நடிக்க உள்ளாராம்.

சிம்ரன் 20 வருடங்களுக்கு பிறகு 90s ரசிகர்களின் மிகவும் ரொமான்டிக் ஜோடி  சிம்ரன் மற்றும் பிரசாந்த் ஆகியோர் இணைந்துள்ளனர். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்குமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சிம்ரன் இந்த திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்பதை அதிகாரபூர்வமாக ட்விட்டரில் வம்சிஹா வெளியிட்டுள்ளார்.