சில வருடங்களுக்கு முன்பு அஜித்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த பிரசன்னா.? எந்த படத்தில் தெரியுமா.?

ajith-and-prasanna
ajith-and-prasanna

தமிழ் சினிமாவில் அதிக வெற்றிப் படங்களை கொடுத்தவர்கள் தான் உச்ச நட்சத்திரங்களாக இருக்கின்றனர் ஆனால் அதற்கு எதிர்மறையாக உள்ளவர் அஜித். இவர் வெற்றி படங்களை விட அதிக தோல்வி படங்களை கொடுத்து இருந்தாலும் அவரது செயல்பாடு நேர்மை ஆகியவை ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளதால் ரசிகர்கள் அவரை தமிழ் சினிமா உச்சத்திலேயே வைத்து அழகு பார்த்து வருகின்றனர்.

அதற்கேற்றார்போல சமீபகாலமாக நடிகர் அஜித்தும் மெனக்கட்டு நடித்து வருகிறார். மேலும் அந்த படங்களும் அதிரிபுதிரி ஹிட் அடிக்கின்றன. இப்பொழுது இரண்டாவது முறையாக ஹச். வினோத் உடன் கூட்டணி அமைத்து வலிமை படத்தில் நடித்தார் ஆனால் இந்த திரைப்படம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து கொண்டு வருவதால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது.

அண்மையில் கூட போனிகபூர் வலிமை படத்தின் ரிலீஸ் மார்ச் 18, 25 ஆகிய தேதிகளில் இருக்கும் என கூறி உள்ளார். இது இப்படி இருக்க அஜித் இந்த வருடமும் இன்னொரு படத்தை கொடுக்க வேண்டும் என வினோதிடம் கதையை கேட்டு தற்போது கமிட்டாகியுள்ளார். வெகு விரைவிலேயே படத்தின் பூஜை போடப்பட்டு தனது 61 வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சூப்பர் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அஜித்தின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படம் மங்காத்தா இது அஜித்தின் 50வது திரைப்படம் ஆகும் இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு வேற லெவலில் எடுத்திருந்தாலும் இதுவரை பார்க்காத அஜித்தை அதில் காட்டியிருந்தார் என்று தான் சொல்ல வேண்டும் அஜித் இந்த படத்தில் வில்லன் ரோலில் நடித்திருந்தார். அதில் அவரது நடிப்பு பிரமிக்கும் வகையில் இருந்தது.

இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, ராய் லட்சுமி, பிரேம்ஜி, அஸ்வின், மகத், அர்ஜுன், ஆண்ட்ரியா, அஞ்சலி போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர். அனைவருக்கும் கதாபாத்திரம் சிறப்பாக அமைந்ததால் இந்த படத்தை வெற்றிகரமாக முடித்த பின் அவர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது இப்படி இருந்த நிலையில் இந்த படத்தில் வெங்கட் பிரபு பிரசன்னாவுக்கு ஒரு சிறப்பான கதாபாத்திரத்தை கொடுக்க அவரை சந்தித்து உள்ளார். ஆனால் அப்பொழுது அவர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்த படத்தில் நடிக்க முடியாமல் போகவே அஜித்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை அப்பொழுது அவர் மிஸ் செய்துள்ளார்.