தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினேகா. இவர் தமிழில் முதன் முதலாக என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அதனைத்தொடர்ந்து ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்மந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
அதன் பிறகு ஒரு காலகட்டத்தில் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணத்தில் பிறகு பெரிதாக எந்த ஒரு திரைப்படத்தில் நடிக்காமல் இருந்த சினேகா சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் திரைப்படத்தில் அக்கா கதாபாத்திரத்தில் நடித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மேலும் தனுஷ் நடிப்பில் வெளியாகிய பட்டாஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
சினேகா தற்போது தன்னுடைய கணவர் பிரசன்னாவுடன் அழகாக தங்களுடைய குடும்ப வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அடிக்கடி இருவரும் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவார்கள் இந்த நிலையில் சமீபத்தில் உலகம் முழுவதும் தமிழர்கள் தமிழ் புத்தாண்டை கொண்டாடி னார்கள்.
அதேபோல் பிரபலங்களும் தமிழ் புத்தாண்டை விமர்சையாக கொண்டாடினார்கள் அந்தவகையில் சினேகா மற்றும் பிரசன்னா அவரது குடும்பத்துடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடி உள்ளார்கள். அதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
அதில் ஒரு புகைப்படத்தில் பிரசன்னா-சினேகாவை குண்டுக்கட்டாக அப்படியே தூக்கிக்கொண்டு கொஞ்சும் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது இதற்கு அதிக லைக் போட்டு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.