தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் சினேகா. இவர் கமல், தனுஷ், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். பிறகு நடிகர் பிரசன்னாவை காதலிக்க ஆரம்பித்தார் இவர்கள் காதல் திருமணத்தில் முடிந்தது இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த ஜோடி தன்னுடைய 11 வது திருமண நாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடினார்கள் இது குறித்து பிரசன்னா தன்னுடைய சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
புன்னகை அரசி என் அன்போடு அழைக்கப்படும் சினேகா தமிழ் சினிமாவில் ஆனந்தம், புன்னகை தேசம், வசூல் ராஜா, வசீகரா, புதுப்பேட்டை, ஆட்டோகிராப் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகர் பிரசன்னா அவர்களுடன் இணைந்து அச்சம் உண்டு, அச்சம் உண்டு என்ற திரைப்படத்திலும் ஒன்றாக நடித்தார் அதன் பிறகு இருவருக்கும் காதல் மலர்ந்தது.
இந்த நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி இரு வீட்டார் குடும்பத்தார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள் இவர்களுக்கு தற்பொழுது ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை இருக்கிறது. இந்த தம்பதிகள் அடிக்கடி சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஷேர் செய்து வருவார்கள்.
இவர்கள் வெளியிடும் புகைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வரும். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்களுடைய 11 வது திருமண நாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடினார்கள் அதன் புகைப்படங்களை சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்கள்.
அதுமட்டுமில்லாமல் அந்த புகைப்படத்திற்கு கேப்டன் ஆக உன் அன்பு இருளிலிருந்து என்னை வழிநடத்தும் ஒளியாக இருக்கிறது. என் துணையாக உன்னை பெற்றதற்கு நன்றி உள்ளவனாக இருக்கிறேன், கடவுளின் ஆசிர்வாதத்தால் உன் அன்பால் புன்னகையால் என் உலகத்தை அற்புதமாக வைத்திருக்கிறாய் என்னை ஒருபோதும் விட்டுக் கொடுக்காத உன் அன்பில் மீண்டும் ஒரு வருடம் கழித்து உள்ளது.
நம்மைப் பற்றி வெளியாகும் வதந்திகள் அனைத்தும் தவிடு பொடியாகட்டும் என பதிவிட்டுள்ளார். திருமண நாளில் பிரசன்னா தன்னுடைய மனைவி சினேகாவை பாராட்டி புகழ்ந்து போட்ட பதிவு ரசிகர் மத்தியில் அதிக லைக் பெற்று வைரல் ஆகி வருகிறது.