திடீரென மருத்துவமனையில் அவசர அவசரமாக அனுமதிக்கப்பட்ட பிரகாஷ்ராஜ்.! என்னதான் ஆச்சு.

ஒரு காலத்தில் தமிழ் சினிமா உலகில் அனைத்து கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வந்தவர் தான் பிரகாஷ்ராஜ் இவர் பல திரைப்படங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் இவர் நிறைய திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் இவ்வாறு நடித்து வந்த இவர் ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விலங்கிவிட்டார்.

மேலும் இவர் வில்லன் கதாபாத்திரத்தை தவிர்த்து தற்பொழுது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் இவரது நடிப்பில் நிறைய திரைப்படங்கள் உருவாகி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது அது மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு மணிரத்னம் அவர்கள் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்த திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது இந்நிலையில் இவரை பற்றி புதிதாக ஒரு தகவல் சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது அந்த தகவல் என்னவென்றால் இவர் தான் கீழே விழுந்து காயம் ஏற்பட்டு தனக்கு அறுவை சிகிச்சை செய்து இருப்பதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் தனக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை முடிந்து விட்டது எனவும் எனக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்த அனைத்து நபர்களுக்கும் நன்றி என தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது நடிப்பை பார்க்க நாங்கள் மிக ஆவலாக இருக்கிறோம்.

என கமெண்ட் பதிவு செய்து வருவது மட்டுமல்லாமல் பலரும் நீங்கள் நடிக்கும் திரைப்படங்களில் நாங்கள் மிக ஆவலாக எதிர்பார்க்கிறோம் நீங்கள் இன்னும் நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் எங்களது ஆசை என இவரை பார்த்து கூறி வருகிறார்கள்.