சின்னத்திரையில் பல ஆண்டு காலங்களாக பணியாற்றி வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர்தான் பிரஜின் இவர் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட சீரியல் தான் இவருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலத்தை பெற்று தந்தது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளத்திருக்கும் நிலையில் அது குறித்து சுவாரசியமான தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பிரஜின் ஜீவா நடிப்பில் வெளிவந்த டிஸ்யூம் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான நிலையில் அதன் பிறகு தொடர்ந்து சரியான திரைப்படங்கள் அமையாத காரணத்தினால் சீரியலில் நடிக்க தொடங்கினார் அந்த வகையில் காதலிக்க நேரமில்லை என்ற விஜய் தொலைக்காட்சியின் சீரியலில் நடித்து பிரபலமான இவர் இதன் மூலம் வெள்ளித்திரையில் சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் பழைய வண்ணாரப்பேட்டை, மணல் நகரம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படத்திற்குப் பிறகு எதிர்பார்த்த வெற்றி அமையாத காரணத்தினால் தொடர்ந்து தரமான கதை உள்ள படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை மேலும் மலையாளத்திலும் சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர் பிறகு நடிகை சாண்ட்ராவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
பிறகு மீண்டும் விஜய் டிவியின் சின்னதம்பி சீரியலில் பிரஜின் ஹீரோவாக நடித்தார் எனவே இதன் மூலம் தொடர்ந்து அன்புடன் கோஷி சில சீரியல்களில் வாய்ப்பு கிடைத்தது இவர் தற்பொழுது D3 என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்நிலையில் சமீப பேட்டியில் அவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக நான் சினிமா துறையில் ஓடிக்கொண்டிருக்கிறேன் இன்னமும் என்னுடைய உழைப்பை போட்டுக் கொண்டே தான் இருப்பேன் நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் நடித்த D3 படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல அங்கீகாரம் கிடைத்தது நினைத்து சந்தோஷமாக இருக்கிறது.
ஆங்காரமாக என்னுடைய வாழ்க்கை தொடங்கியது அதன் பிறகு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக நான் என்னை செதுக்கியேன் மேலும் நான் நடிகர் மோகன் ஜியோவுடன் நீண்ட கால நண்பர் அவருடைய பழைய வண்ணாரப்பேட்டை படத்தில் நான் நடித்திருந்தேன் அந்த படம் இப்பொழுது வெளிவந்திருந்தால் மக்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட்டிருக்கும்.
அதேபோல அவர் இயக்கத்தில் வந்த திரௌபதி படத்தில் ஹீரோவாக நடித்த முதலில் அவர் என்னை தான் அணுகி இருந்தார். ஆனால் அந்தக் கதை எனக்கு சில கேள்விகள் இருந்தது. அதனால் என்னால் அதில் நடிக்க முடியவில்லை இருந்தாலும் அவர் வெற்றி பெற்றார் சினிமாவில் உன்னுடைய உழைப்பு சரியாகத்தான் இருக்கிறது ஆனால் வெற்றி கிடைக்க தான் கொஞ்சம் தாமதம் ஆகிறது என கூறியுள்ளார்.