உறவாடி கெடுக்கும் மாயாவிற்கு பிரதீப் ஆண்டனி கொடுத்த பதிலடி… வைரலாகும் ட்வீட்…

pradeep antony maya
pradeep antony maya

விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 7 சில நாட்களுக்கு முன்புதான் முடிவடைந்தது இதில் வின்னராக அர்ச்சனாவும்  ஃபர்ஸ்ட் ரன்னார்ப்பாக மணியும்  செகண்ட் ரன்னர் அப்பாக மாயாவும் வெற்றி பெற்றனர். ஆனால் மாயா தன்னை பிக் பாஸ் வின்னராக நினைத்து  பிக் பாஸ் வீட்டில் வாழ்ந்து வந்தார். என்னதான் அவருக்கு  பல திறமைகள் இருந்தாலும்  எண்ணங்கள் சரியில்லை என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.

மாயாவிற்கு  அர்ச்சனாவின் இந்த வெற்றி ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் இது பணத்தால் பெறப்பட்ட வெற்றி என ட்விட் செய்தார். அதுமட்டுமில்லாமல் கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல என ட்வீட் செய்தார். இதுபோல பல ட்விட்ட்களை வெளியிட்டு தனது வன்மத்தினை வெளிப்படுத்தினார்.

நான் டைட்டில் வின்னர் கிடையாது.. பிக்பாஸ் வீட்டில் இவருக்கு நடந்தது அநியாயம்.! அணுகுண்டை வீசிய அர்ச்சனா

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது மாயா தான் கேமிற்காக தான் அனைத்தையும் செய்கிறேன் கண்டன்டுக்காக தான் மற்றபடி எனக்கு யார் மீதும் எந்த ஒரு காழ் புணர்ச்சியும் கிடையாது என அடிக்கடி சொல்லி வந்தார். ஆனால் தற்போது தான் தோற்றது ஏற்றுக்கொள்ள முடியாமல் மற்றவர்களை விமர்சித்து வருகிறார்

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது பிரதீப் ஆண்டனி ஒரு சிறந்த போட்டியாளர் அவரை தோற்கடிக்க முடியாது என நினைத்து அண்ணன் என்று சொல்லி அவரது புல்லி கேங்க்கை வைத்து ரெட் கார்டு கொடுத்து முதுகில் குத்தி வெளியேற்றினால். அதற்கு காரணம் நேரடியாக போட்டி போட்டால்  அவரை ஜெயிக்க முடியாது என்பதே.

captain miller box office : படும் அடியாக சரிந்த கேப்டன் மில்லரின் வசூல்.! 4 வது நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா.?

இதுபோலவே அனைவரிடமும் நட்பாகவும் பாசமாகவும் பழகி மாயா தோற்கடித்தார். அதாவது மாயாவுக்கு யாரெல்லாம் ஜால்ரா தட்டுகிறார்களோ அவர்களை வரிசையாக மக்கள் வெளியேற்றினர். அதனால் தான் புல்லி கேங்க் A team முழுவதும் அழிந்தது. அவர்களை எதிர்த்த B team  கடைசி வரை இருந்து விளையாடியது.

இந்த நிலையில் தற்போது பிரதீப் ஆண்டனி மாயவிற்கு instagramல் ஒரு போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளது. ஹாய் மாயா நீ நல்லா இருப்பன்னு தெரியும் லைஃப்ல்லாம் எப்படி போகுது என்னுடைய மதிப்பு 50 லட்சம்.  நான் அவ்வளவுலாம் வொர்த் இல்லைன்னு நீ நினைச்ச. நான் புரிஞ்சுக்கிறேன்.உன்னோட விளையாடியது நல்லா இருந்தது செக்மேட் என சொல்லி பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு  இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

பின்னாடி நிக்க வேண்டிய மனுஷனாயா இவர்.. GOAT போஸ்டரில் விஜய்க்கு பின்னாடி இருக்கும் பிரசாந்தை பார்த்து கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்…

இதற்கு பிரதீப் ஆண்டனியின் ரசிகர்கள் மாயாவுடன் எந்த ஒரு நட்பும் வேண்டாம் அவரை நீங்கள்  மன்னித்து ஏற்றுக் கொண்டாலும் நாங்கள் மன்னிக்க மாட்டோம், கர்மா அவளுக்கு கண்டிப்பா தண்டனை கொடுக்கும் . என இதுபோல பல நெகடிவ் கமெண்ட்களை மாயாவுக்கு எதிராக தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/TheDhaadiBoy/status/1747088744107458696