தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குனர்களில் ஒருவராக வளம் வருபவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். இவர் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் இயக்கிய முதல் படமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது தொடர்ந்து அடுத்ததாக லவ் டுடே என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார்.
முதல் படத்தில் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் இரண்டாவது படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் கடந்த (நவம்பர் 4ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியானது. திரையில் வெளியான இந்த படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய அங்கமாக சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரவீனா ரவி, ஆதித்யா கதிர், அஜித், விஜய் வரதராஜன், மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.
தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற லவ் டுடே திரைப்படத்தை தற்போது தெலுங்கில் டப் செய்து நேற்று முன்தினம் (நவம்பர் 25ஆம் தேதி) ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள திரையரங்குகளில் இந்தப் படம் வெளியானது. தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற இந்த படம் தெலுங்கிலும் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.
இந்த படம் தெலுங்கில் வெளியான முதல் நாளில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் 2.22 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் தற்போது வெளியாகி உள்ளது. தமிழில் வசூலில் சாதனை படைத்த லவ் டுடே திரைப்படம் தெலுங்கிலும் நல்ல வரவேற்பு பெற்று வருவதாக கூறப்படுகிறது.